Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ

சென்னையில் சாதாரணமாக ஆட்டோவில் அமர்ந்து சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Mar 19, 2021, 02:21 PM IST
Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ

Cinema News: தல அஜித் (Thala Ajit) பெரும்பாலும் எளிமையாகக் இருக்கக்கூடியவர், சாதரணமாக யாரிடமும் பழகக்கூடியவர் என்று அறியப்படுபவர். தற்போது, அவர் ஒரு ஆட்டோவில் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், சென்னையில் சாதாரணமாக ஆட்டோவில் அமர்ந்து சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அஜித் (Actor Ajithkumar) தற்போது தனது வரவிருக்கும் படமான "வாலிமை"யின் படப்பிடிப்பு பணியில் இருக்கிறார்.

சென்னை ஆட்டோ சவாரிக்கு செய்யும் அஜீத்:
அஜித் தமிழ் திரையுலகில் (Tamil Film Industry) முன்னணி நடிகர்களில் ஒருவர். சில வருடங்களுக்கு முன்பிருந்து, ஊடகங்களில் இருந்து விலக்கி இருக்கிறார். அவர் நேர்காணல்களை வழங்கவோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவது இல்லை என முடிவு செய்துள்ளார். 

ALSO READ | நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும்: வைரல் ஆன பாஜக தலைவர் ட்வீட்

ஆனால், நடிகர் அஜித் வெளியேறும் போதெல்லாம், அவரது ரசிகர்கள் பைத்தியம் பிடித்தது போல புகைப்படங்களை எடுப்பார்கள். சமீபத்தில், அஜித் ஒரு ஆட்டோவில் செல்வதைக் கண்ட (Ajith travelling in an Auto), அவரது ரசிகர்கள் அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளனர். அவர் ஆட்டோவில் சவாரி செய்தபோது கருப்பு உடையிலும், முகமூடி அணிந்திருப்பதைக் காணலாம்.

சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இங்கே:

 

 

அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
வலிமை படத்தின் படப்பிடிப்பை நடிகர் அஜித் பெரும்பாலும் முடித்துள்ளார். அதேநேரத்தில் "வலிமை" (Valimai) படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு அட்டவணை இன்னும் நிலுவையில் உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor) தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். 

 

எச் வினோத் (H Vinoth) இயக்கியத்தில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, சுமித்ரா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படம் ஆகஸ்டில் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos

More Stories

Trending News