வனப்பகுதியில் கூட்டமாக சுற்றும் யானைக் கூட்டத்தின் நடுவே நடக்கும் குட்டியானைகள் காண்போரின் கண்களை எளிதாக பறித்துவிடும். அவற்றின் அழகே நடக்கும்போதே தாய் யானையுடன் சேட்டை செய்துவது தான். அந்த மாதிரியான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் உலாவரும். அண்மையில் வைரலான வீடியோ ஒன்றில், வனப்பகுதியில் சாலையில் கூட்டமாக நடந்து வரும் யானைக் கூட்டத்தின் நடுவே குட்டியானை ஒன்று வேகமாக நடந்து முன்னால் செல்வது, பலரையும் ரசிக்க வைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முகத்தில் புன்னகை பூக்கவைக்கும் மணமக்களின் கியூட் சண்டை: வைரல் வீடியோ


அதன்பிறகு இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ காண்போரை வெகுவாக ஈர்த்துள்ளது. வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைக் கூட்டத்தின் நடுவே, குட்டி யானை ஒன்று உள்ளது. பரந்து விரிந்திருக்கும் வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைகளை சுற்றி கொக்குகள் அமர்ந்திருக்கின்றன. அந்த கொக்குகளை பார்த்தும் குஷியான குட்டி யானை, தும்பிக்கையில் வாள் வீசுவதுபோல் வீசு விளையாடுகிறது. சேட்டையாக இருக்கும் இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.



இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த பிறகு ரவீந்திர ஜடேஜா பேட்டை வாள்வீசுவது போல் சுழற்றியதுடன் ஒப்பிட்டுள்ளார். 2வது டெஸ்ட் சதமடித்த ஜடேஜா இப்படி தான் பேட்டை சுழற்றியதாக காமெடியாக கமெண்ட் அடித்துள்ளார். இந்த வீடியோ இதுவரை சுமார் 19 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | குரங்கு விரித்த வலையில் சிக்கிய புலி; வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR