வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
பொதுவாக இணையத்தில் நாம் காணும் திருமண வீடியோக்கள், மிகவும் கியூட்டாக, நாம் திரும்பித் திரும்பி பார்க்கும் வகையில் அமைகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. இவற்றின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள்.
பொதுவாக திருமணங்களில் பல வகையான சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில மிகவும் வேடிக்கையாகவும் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள திருமண வீடியோவும் இது போன்ற ஒரு சடங்கு பற்றியது.
இதில் காணப்படும் ஒரு சடங்கில் மணமக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. இந்த மோதல் வேடிக்கையான ஒரு மோதல் தான். இருவரின் இந்த அழகான காணொளியை பார்த்தவர்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்தில் பல விருந்தினர்கள் வந்திருப்பதைக் காணலாம். மணமகனும், மணமகளும் அனைத்து சடங்குகளையும் செய்கிறார்கள். அப்போது பானையில் மோதிரத்தை போட்டு அதை தேடும் சடங்கும் நடக்கிறது. இதில் மிகவும் வேடிக்கையான முறையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்.
மேலும் படிக்க | லேட்டா வந்த மாப்பிள்ளை, டென்ஷன் ஆன மணப்பெண்: போர்க்களமான மணமேடை
அனைத்து விருந்தினர்களும் மணமகன் மணமகள் இடையில் நடக்கும் இந்த கியூட்டான சண்டையைப் பார்த்து சிரிக்கத் தொடங்குகிறார்கள். இந்த சடங்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சடங்கின் போது, பால், ரோஜா பூ கலந்த நீர் ஒரு பானையில் ஊற்றப்படு அதில் ஒரு மோதிரமும் போடப்படுகின்றது. பின்னர் மணமகனும், மணமகளும் இந்த மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும். இது 3 சுற்றுகளைக் கொண்டது. யார் மோதிரத்தை அதிக முறை கண்டெடுக்கிறாரோ அவரே வெற்றி பெறுகிறார்.
மணமக்களின் கியூட் சண்டையின் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
திருமணம் தொடர்பான இந்த வீடியோ thebridesofindia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர், லைக் செய்துள்ளனர். இந்த கியூட்டான வீடியோவுக்கு இணையவாசிகள் தங்கள் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | சின்னபுள்ளதனமால்ல இருக்கு!! மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR