கோடையில் எல்லாம் வெளியில் சுற்றிவிட்டு வந்தால் எப்போது டா சாமி படுப்போம் என்றிருக்கும். கூடவே ஏசி இருந்தால் டபுள் சந்தோஷம் தான். ஆனால் இந்த வீடியோவில் வைரலாகியிருக்கும் பாம்பு, இருக்கிற சூடு பத்தாது என்று காரின் என்ஜின் சூட்டில் இருந்தவாறு செட்டிலாகியுள்ளது. அந்த சூடு எல்லாம் ஒரு சூடே இல்லை என்கிறபடி அதில் படுத்திருக்கிறது. Latest Sightings என்ற யூடியூப் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தாலும், 2.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று ஸ்டார் வீடியோக்கள் வரிசையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவின் தொடக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் இணைந்து காட்டுக்குள் சவாரி செய்கின்றனர். நான்கு ஐந்து கார்களில் வரும் அவர்கள் ஓர் இடத்தில் நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மலைப்பாம்பு அங்கு வருகிறது. அதனை அவர்களும் பார்த்துவிடுகிறார்கள். பாம்பு என்னதான் செய்யும் என்று வேடிக்கை பார்க்கும்போது திடீரென காரின் அருகே சென்று அதற்குள் புகுந்துவிடுகிறது. அங்கிருப்பவர்கள் அனைவரும் அதனை பார்க்கின்றனர். பின்னர் அந்த பாம்பு காருக்குள் இருக்கும்போதே அதனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குள் பயணிக்கின்றனர்.


மேலும் படிக்க | முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ


ஓர் இடத்துக்கு வந்த பிறகு காரின் என்ஜின் கதவை திறந்து பார்க்கும்போது, ராட்ச மலைப்பாம்பு அங்கு ஒய்யாரமாக படுத்திருக்கிறது. சுமார் 12 அடி நீளமுள்ள அந்த பாம்பு படுத்திருப்பதை பார்த்து அங்கிருக்கும் சுற்றுலாப் பயணிகள் எல்லோரும் வியப்பின் உச்சிக்கே செல்கின்றனர். பின்னர் காரில் இருந்து இறங்கும் பாம்பு ஆவேசத்துடன் வேகமாக செல்கிறது. அது கீழிறங்கி வருவதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் தெறித்து ஓடுகின்றனர். நாக்கை வெளியில் அடிக்கடி நீட்டியபடியே பாம்பு காட்டுக்குள் சென்றுவிடுகிறது.



என்னதான் இருந்தாலும் ராட்ச மலைப்பாம்பை காருக்குள் வைத்துக் கொண்டு அந்த சுற்றுலாப் பயணி பயணித்தது சாகசத்துக்கு இணையானது தான் என சக சுற்றுலா பயணிகள் பாராட்டுகின்றனர். ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்கள் இது கடுமையாக தண்டிக்கப்படகூடிய செயல் என்றும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | மொட்டை மாடியில் பட்டையை கிளப்பிய சிறுமி: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ