ஷ்ஷ்... ஷூல பாம்பு: ஆடிப்போன நபர், அசத்தல் வைரல் வீடியோ
Snake Viral Video: தற்போது பாம்பு பற்றிய விசித்திரமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு ஷூவில் பாம்பு ஒன்று மறைந்திருப்பதை காண முடிகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
பாம்புகள் இணையவாசிகளுக்கு மிகவும் பிடித்தவை. இவற்றின் வீடியோக்களை இவர்கள் வைரல் ஆக்காமல் விடுவதில்லை. சமூக ஊடகங்களில் பல பாம்பு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பாம்புகள் பல இடங்களில் பதுங்கி இருக்கும் வீடியோக்களை நாம் இணையத்தில் பல முறை காண்கிறோம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல இடங்களில் பாம்புகள் பதுங்கிக்கொண்டு நம்மை பாடாய் படுத்துவதுண்டு.
சில சமயம் ஸ்கூட்டிக்குள்ளும், சில சமயங்களில் காலணிகளுக்குள்ளும் கூட பாம்புகள் மறைந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது பாம்பு பற்றிய விசித்திரமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு ஷூவில் பாம்பு ஒன்று மறைந்திருப்பதை காண முடிகின்றது. அந்த ஷூவை அணிய வரும் நபர் பாம்பை ஷூவில் பார்த்த உடனேயே கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகிறார்.
மேலும் படிக்க | வீட்டின் கூரையில் செட்டிலான 25 அடி நீள மலைப்பாம்புகள்..திகிலூட்டும் வைரல் வீடியோ
காலணிக்குள் மறைந்திருந்த பாம்பு
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவர் வெளியே செல்ல தயாராகி வீட்டை விட்டு வெளியே வருகிறார். அவர் செருப்பு அணியச் செல்லும்போது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவரது காலணிக்குள் ஒரு நாகப்பாம்பு மறைந்துள்ளது. அந்த நபர் பாம்பை வெளியே எடுக்க முயலும்போது, அது படம் எடுத்து ஆடத் தொடங்குகிறது. இந்த காட்சி நம்மை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
பீதியை கிளப்பும் வீடியோவை இங்கே காணலாம்:
பாம்பு தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கர்நாடகாவில் இருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது @bharathircc என்ற ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | பாம்பிடம் சின்னாபின்னமான சிக்கிய தவளை; மனதை பதற வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ