பாம்பு மற்றும் அணில் சண்டை: இணையத்தில் விலங்குகள் சண்டையிடும் பல வீடியோக்கள் உள்ளன. பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுவது வழக்கம். அப்படி இருக்கையில், ஒரு அணில் பாம்புடன் சண்டை போட தயாராவதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? பாம்புக்கும் அணிலுக்கும் சண்டை நடப்பதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோவில் அப்படி ஒரு விஷயத்தை காண முடியும். இதை பார்த்த அனைவரும் அணிலின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புக்கு சவால் கொடுத்த அணில்


இந்த வீடியோவின் துவக்கத்தில் ஒரு சிவப்பு சுவரைக் காண முடிகின்றது. சுவரின் ஒருபுறம் அணிலும் மறுபுறம் பாம்பும் தெரிகிறது. மெதுவாக இரண்டும் நெருங்கி வருவதையு நம்மால் வீடியோவில் பார்க்க முடியும். இதற்குப் பிறகு, இந்த வீடியோவில் நடப்பதை நம்மால் நம்பவே முடியாது. நாம் எதிர்பாராத பல விஷயங்கள் இந்த வீடியோவில் நடக்கின்றன. விலங்குகளுக்குள்ளும் இவ்வளவு நடக்குமா என நமக்கு ஆச்சரியமே ஏற்படுகின்றது. 


மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


வினோதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இறுதியில் வென்றது யார்? 


இந்த வீடியோவின் தலைப்பில் ‘பாம்புக்கும் அணிலுக்கும் இடையே சுவரின் மீது நடக்கும் சண்டை’ என எழுதப்பட்டுள்ளது. வீடியோவில், மிக தைரியமாக அணில் பாம்பை நோக்கி வருவதை காண முடிகின்றது. பாம்பு அணிலை நோக்கி வேகமாக வருகிறது. இதற்கு இடையில் ஒரு காகமும் வந்து சத்தம் போட்டு அணிலை ஆதரிக்கத் தொடங்குகிறது. இறுதியில் பாம்பு ஓடிவிடுகிறது. இந்த வீடியோ இணையவாசிகளால் மிகவும் விரும்பப்பட்டு வருகிறது. 


வீடியோ வைரலானது


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 34 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு அணில் மற்றும் காகத்தின் முன் ஆபத்தான பாம்பு ஒன்று தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடுவதை காண முடிகின்றது. இத்தகைய சிறு உயிரினங்கள் உக்கிரமான பாம்புடன் சண்டை இட்டது மட்டுமல்லாமல், அதற்கு சரி சமமான போட்டியையும் கொடுத்ததை நம்ப முடியவில்லை. 


இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்புவதோடு இதன் மூலம் பாடத்தையும் கற்று வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. பல பயனர்கள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | மேக்-அப் கலைத்த மணமகள், மயங்கி விழுந்த மணமகன்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ