6 அடி நீள பாம்பை பிடித்து இழுத்து வரும் குட்டிப் பெண்... நடுங்க வைக்கும் வீடியோ!
Snake Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றது. பம்பு என்றால் படையே நடுங்கும் என கூறுவார்கள். பாம்பு பிடிப்பவர்கள் ப்லர் கூட மிகவும் எச்சரிக்கைஊடன் தான் பாம்பை பிடிப்பார்கள். மிகச் சிலருக்கே, பாம்புக்கு அருகில் இருப்பதற்கும், அதை பிடித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தைரியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
உங்கள் வீட்டை சுற்றி பாம்பு பதுங்கியிருப்பதை நீங்கள் கண்டால் என்ன செய்வீர்கள்? சரி, பலர் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள், ஆனால் இந்த குழந்தை அப்படி எல்லாம் செய்யவில்லை என்பதோடு, அதனை பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குழந்தை பாம்பை தனது வீட்டிற்குள் இழுத்துச் சென்று அதன் குடும்பத்திற்கு கொண்டு வருவதைக் காணலாம்.
வீடியோவில் ஒரு குழந்தை பாம்பின் வாலை பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். பின்னர், அது மற்ற குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குள் அதை இழுத்துச் செல்கிறது. குழந்தையின் கையில் பாம்பு இருப்பதைக் கண்டவுடன், அவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுவது போல் தெரிகிறது. அப்போது, ஒரு மனிதர் குழந்தையை பின்னால் இழுத்து பாம்புடன் வெளியே கொண்டு செல்கிரார். வீடியோவில் உள்ள இரண்டு குழந்தைகள் பாம்புக்கு பயந்து அழ ஆரம்பித்தது போல் தெரிகிறது.
குழந்தை பாம்பை வீட்டிற்குள் இழுத்துச் செல்லும் வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வீடியோ ஜூலை 1 அன்று பகிரப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, இது 18 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. வீடியோ பல லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வைரல் வீடியோ பற்றிய தங்கள் எண்ணங்களை பலர் வெளியிட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு மின் கழுகின் மீன் வேட்டை ஒன்று மிகவும் வைரலாகியது. வைரலாகிய அந்த வீடியோவில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடும் கழுகு, தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக வலுமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். அதனை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதிலும், ட்ரோல்களைப் படிப்பதிலும் செலவிடுகிறார்கள். மக்கள் தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் நேரம் இது. தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் மக்களுக்கு உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ