வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. இவற்றின் சண்டையை பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போதும் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகின்றது. 


இந்த வீடியோவில் நாய்க்கும் பாம்புக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. பொதுவாக இப்படி ஒரு சண்டையில் பாம்பு தான் வெற்றி பெறும் என அனைவரும் நம்புவார்கள். ஆனால், அதற்கு மாறான ஒரு விஷயம்தான் இதில் நடக்கிறது. 


மேலும் படிக்க | முதலையின் வாய்க்குள் சென்று உணவை திருடிய கில்லாடி பூனை: திக் திக் வைரல் வீடியோ 


பாம்புக்கும் நாய்க்கும் பயங்கர சண்டை: வீடியோவை இங்கே காணலாம்:



 வீடியோவில், பாம்பு படம் எடுத்தபடி நாயைத் தாக்க முயல்வதைக் காண முடிகின்றது. அதே சமயம், நாயும் பாம்பை நோக்கி ஆக்ரோஷமாக பார்க்கிறது. நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருக்கிறது. அது பாம்பை சற்று அச்சுறுத்துகிறது. நாய் குரைப்பதை பார்த்து பாம்பு பின்வாங்குகிறது. அதன் பிறகு மீண்டும் பாம்பு நாயை தாக்க வருகிறது. ஆனால், பாம்பின் இந்த செயலை பார்த்து நாய்க்கு கோவம் வருகிறது. 


வென்றது யார்? 


பாம்பு மீண்டும் தாக்கும் போது நாய் தன் பொறுமையை இழந்து விடுகிறது. அதனால் தனது கோவத்தை அடக்க முடியவில்லை. அது பாம்பை வாயில் கவ்விக் கொள்கிறது. இதற்குப் பிறகு பாம்பின் நிலை மிகவும் மோசமாகிறது. நாய் பாம்பை கொன்றுவிடுகிறது. இந்த சண்டையில் நாய் வெற்றி பெறுகிறது.


சமூக ஊடகங்களில் வைரல்


இந்த வீடியோ @iDumeby என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


மேலும் படிக்க | குறும்பா! அது கிலோ என்ன விலை? பவ்யமாய் ஸ்கூலுக்கு போகும் குரங்குக்குட்டிகள் வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ