‘ஒளிஞ்சிக்க வேற இடம் கிடைக்கலயா!!’: ஹெல்மெட்டில் பாம்பு, பிழைத்ததா உயிர்? வைரல் வீடியோ

Scary Snake Video: இந்த வீடியோ உங்களை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும். ஆம்! பாம்பு ஒன்று ஹெல்மெட்டில் ஒளிந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2023, 03:24 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘ஒளிஞ்சிக்க வேற இடம் கிடைக்கலயா!!’: ஹெல்மெட்டில் பாம்பு, பிழைத்ததா உயிர்? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்று பாம்பு. சில பாம்புகள் கடித்தால் உடனடி மரணம் நிகழ்வதுண்டு. ஆகையால், மக்கள் பாம்புகளிடமிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், பாம்புகளும் கில்லாடிகள். பல சமயங்களில் அவை வீட்டின் கூரை, ஓலை, அலமாரி, காலணிகள், கார் அல்லது மற்ற இடங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களில் ஒளிந்து கொள்கின்றன. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இவை நமக்கு மிகவும் ஆபத்தாகிவிடும். பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

தற்போதும் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் ஒரு பாம்பு மறைந்துள்ளது. இந்த வீடியோ நம்மை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. 

மேலும் படிக்க | ‘டைட்டா பிடி..விட்டுடாத’: குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி, மனதுக்கு இதமளிக்கும் வைரல் வீடியோ

நம்ப முடியாத இடத்தில் ஒளிந்திருக்கும் பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் ஒரு கையில் கருப்பு நிற ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் ஒரு இரும்பு கம்பியையும் பிடித்திருப்பதைக் காண முடிகின்றது. அவர் ஹெல்மெட்டுக்குள் இருந்து எதையோ எடுக்க முயல்வதை வீடியோவில் பார்க்க முடிகின்றது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, அவர் கம்பியின் உதவியோடு ஹெல்மெட்டிருந்து பாம்பை வெளியே எடுக்கிறார். 

 

இந்தக் காட்சி நம்மை பீதியில் ஆழ்த்துகிறது. ஹெல்மெட்டை உள்பக்கம் பார்க்காமல் அணியும் நபரா நீங்கள்? அப்படியானால் இந்த வீடியோவை பார்த்தால் அது எவ்வளவு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதை புரிந்துகொள்வீர்கள். 

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் aahanslittleworld என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த வீடியோவை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | கடவுளே! மொட்டை மாடியில் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News