Viral Video: பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியபை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியபை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ இனையத்தில் பரவி வருகிறது. ஆபத்தான பாம்பும் குட்டி பறவையும் சண்டை போடுவது தொடர்பான காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
பல அடி நீளமுள்ள ஆபத்தான பாம்பு ஒன்று மரத்தின் மீது ஏறி பறவைக் கூட்டைத் தாக்கிய போது நடந்த காணொளியாக வெளிவந்துள்ளது. கூட்டை காக்க பறவைக்கும் பாம்புக்கும் சண்டை நடந்தபோது, உயிரை பொருட்படுத்தாமல் தனது கூட்டை காக்க போராடியது, இணைய வாசிகளை (Social Media) ஆச்சர்யத்தில் அழ்த்தியுள்ளது.
ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!
பாம்பு கூட்டை தாக்கிய போது, பறவை உடனடியாக கூட்டை நெருங்கி வந்து உயிரை பொருட்படுத்தாமல் பாம்பை தாக்கியதை வீடியோவில் காணலாம். பறவைகள் பாம்பு கூட்டை விட்டு தனது வாயை எடுக்கும் வரை தாக்கிக் கொண்டே இருந்தது. பறவைகளின் தொடர் தாக்குதலால், கடைசியில் பாம்பு தாக்குதலை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியது.
வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சில நாட்களாக பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். இது nature27_12 என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR