பாம்பு காதல் வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். இந்த வீடியோக்களின் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பை நினைத்தாலே நமது மனதில் முதலில் வரும் வார்த்தை பயம் தான். இருப்பினும், பலர் பாம்பு வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவை மிகவும் சுவாரஸ்யமாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றன. நேரில் நெருங்க முடியாத பாம்புகளின் பல்வேறு வகையான வீடியோக்களை மக்கள் இந்த வீடியோக்களின் மூலம் கண்டு களிக்கிறார்கள். தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் இரு பாம்புகளுக்கு நடுவில் நடக்கும் ஒரு வித விளையாட்டை காண முடிகின்றது. இருப்பினும், இந்த இரு பாம்புகளும் காதலில் கட்டித் தழுவிக் கொள்கின்றனவா, இது இவற்றின் ஒரு வித நடன அசைவா, அல்லது ஒரு வேளை மோதலா என்பதை வீடியோவை பார்த்து சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.


மேலும் படிக்க | பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!! 


எனினும், வீடியோவை பார்த்தால், இரு பாம்புகளும் பாசத்துடன் கட்டி அணைப்பது போலத்தான் தோன்றுகிறது. இரண்டு பாம்புகள் ஒன்றன் மீது மற்றொன்று அன்பை பொழிவதை காண முடிகின்றது. திறந்த வெளியில், இரண்டு பாம்புகளும் உடல்கள் பின்னிப்பிணைந்து காதல் செய்வது போலவே வீடியோவை பார்க்கும் போது தோன்றுகிறது.  சமூக ஊடகங்களில் பலர் இவை காதலில் அழகாக நடமாடும் பாம்புகள் என கூறி வருகிறார்கள். சிலரோ இது இருவருக்கும் நடுவில் நடக்கும் மவுன யுத்தம் போல் தோன்றுகிறது என கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


பாம்புகளின் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் snake..world என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் தலைப்பில், ‘இதை யார் பார்க்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்களை டேக் செய்யவும்’ என எழுதப்பட்டுள்ளது. 


பாம்புகளின் வேற லெவல் பாசத்தை காட்டும் வீடியோ இதோ:


 



 


இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். பலர் இது பாம்பு காதல் என கூறினாலும், இது பாம்புகளின் இனச்சேர்க்கையோ அல்லது பாம்பின் அன்பு நடனமோ அல்ல, அவை கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளன என சிலர் உறுதியாக கூறுகிறார்கள். 


மேலும் படிக்க | திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ