கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, விளையாட்டு உலகில் பல்வேறு விசித்திரமான காட்சிகளை காண நேரிடுகிறது. கார்டபோர்டு ஸ்டான்ட்ஸ் முதல் விளையாட்டு வீரர்கள் கொண்டாடிய சோஷியலி டிஸ்டன்ஸ்ட் கோல் கொண்டாட்டங்கள் வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. அந்த வகையில் தற்போது விளையாட்டு உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்று நீராவி ரயில் தான், இது இணையத்திலும் தற்போது வைரலாகி வருகிறது. ஸ்லோவாக்கியன் மினோக்கள் டாட்ரான் சியர்னி பலோக் கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் சியர்னி ஹ்ரான் ரயில் பாதையால் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தில் அடிக்கடி இல்லாமல் எப்போதாவது ஒரு பழங்கால நீராவி ரயில் ஒன்று புகையுடன் மைதானத்தை கடந்து அங்குள்ள ஆதரவாளர்களின் செயல்களுக்கு தற்காலிகமாக இடையூறு ஏற்படுத்தி தடுக்கும் விதமாக செல்கிறது. அதேமயம் இந்த பழைய நீராவி ரயிலானது கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இருந்து இயக்கப்படவில்லை. கடந்த 1909ம் ஆண்டு இந்த சியர்னி ஹ்ரோன் இரயில்வே, ஃபாரஸ்ட் ரயில்வேயாக மரக்கட்டைகளை வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதனையடுத்து 1927 ஆம் ஆண்டில், சியர்னி பலோக் மற்றும் ஹ்ரோனெக் இடையே இந்த இரயிலில் பயணிகள் போக்குவரத்து செய்ய அனுமதிக்கப்பட்டது.
Slovakian team Tatran Cierny Balog have an actual railway running alongside their pitch.
Yes, seriously. pic.twitter.com/dQJjFAv5fZ
— The Blizzard (@blzzrd) February 15, 2021
மேலும் படிக்க | 'ஆரம்பமே இப்படியா?' சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ
அதன்பின்னர், கடந்த 1982-ல் இந்த ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, அதனையடுத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சில ஆர்வலர்கள் இந்த ரயிலை சீரமைக்க எண்ணி இதனை பழுதுபார்த்து, சுற்றுலாப் பயணிகளுக்கான பாரம்பரிய ரயில்பாதையாக மீண்டும் திறக்கப்பட்டது. சியர்னி ஹ்ரான் ரயில்பாதையின் நீளம் 17 கிலோமீட்டர் ஆகும். அதேசமயம் 1914-ல் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, கால்பந்து மைதானம் இங்கு இல்லை, அந்த கிராமம் படிப்படியாக வளர்ந்த பிறகு தான் இந்த மைதானம் கட்டப்பட்டது. சியர்னி பாலோக் என்பது ஒரு பெரிய நகராட்சி ஆகும், இதில் 13 கிராமங்கள் அடங்கும், மேலும் இது இரண்டாம் உலகப் போரின் போது நாஜி எதிர்ப்பு ஸ்லோவாக் தேசிய எழுச்சியின் மையங்களில் ஒன்றாக இந்த பகுதி திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்வேயின் சிறப்பு என்னவென்று பார்த்தால் கால்பந்து மைதானத்தின் நடுவே செல்லும் உலகின் ஒரே ரயில் பாதை இதுதானாம், அதனால் தான் இது தற்போது எல்லோராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
The Stadium of Slovakian side TJ Tatran Čierny Balog with trains running through#Slovakia #Stadiums #Trains pic.twitter.com/5bc0LHYmiz
— Football Memories (@footballmemorys) February 11, 2017
மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு கிஸ் கொடுத்த மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ