பனி சிறுத்தைகளை பார்ப்பதே அதியசம். அவை வேட்டையாடும் வீடியோ கிடைப்பது என்பதெல்லாம் பிறப்பின் வரம் என்றே கூட சொல்லலாம். வீடியோ பார்ப்பவர்களுக்கு அதன் அருமை புரிவது எல்லாம் கடினம் தான். வீடியோ எடுத்தவருக்கு தான் அது எப்படியான பாக்கியம் என்பது தெரியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் பனி சிறுத்தையின் வீடியோ இந்தியாவின் இமயமலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. செங்குத்து மலையில் புயல் வேகத்தில் ஓடி வந்து, இடையே இருக்கும் பள்ளத்தாக்குகளில் ராட்ச பாய்ச்சலை எடுத்து மானை வேட்டையாடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: நீ பயங்கர நாக பாம்பா இருக்கலாம்... ஆனா நாங்க பாலைவனக் கீரிகள்!


இந்த வீடியோவை பார்க்கும்போது உங்களுக்கு பனிசிறுத்தையின் வேட்டையாடல் மெய்சிலிர்க்க வைக்கும். அந்தளவுக்கு துல்லியமாக இலக்கை நோக்கி வேட்டையை தொடங்கியிருக்கிறது. @the_wildindia என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கும் அந்தவீடியோவில் முதலில் செங்குத்தான இமயமலையின் அழகிய காட்சிகள் தென்படுகின்றன. கேமரா ஆங்கிளை ஜூம் செய்து பார்க்கும்போது, திடீரென 3 மான்கள் தலைதெறிக்க ஓடி வர பின்னால் பனிச்சிறுத்தை ஆக்ரோஷத்துடன் அவற்றை துரத்துகிறது. மூன்று மான்களில் இரண்டு மான்கள் லாவகமாக பிரிந்து சென்று தப்பிக்க, சிறுத்தையின் இலக்கில் ஒரே மான் சிக்கிவிடுகிறது.



இதனை விட்டால் வேட்டையில்லை என்பதை நன்கு தெரிந்து கொண்ட பனிச்சிறுத்தை லாவகமாக அதனை குறித்து வைத்து தன்னுடைய அத்துனை அஸ்திரங்களையும் எடுக்க தொடங்குகிறது. மான் புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க, சிறுத்தை வேகத்தை ஜெட் வேகத்துக்கு உயர்த்துகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் செங்குத்து மலையின் சரிவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இடையிடையே வரும் பள்ளத்தாக்குகளின் பள்ளங்களையெல்லாம் சிறுத்தையும் மானும் கண்டுகொள்ளவே இல்லை. தப்பித்தால்போதும் என்று மானும், வேட்டையாடியே தீர வேண்டும் என பனிச்சிறுத்தையும் காற்றில் பறக்காத குறையாக ஓடுகின்றன. இறுதியின் மான் ஓரிடத்தில் தவறிவிழுந்துவிட, பனிச்சிறுத்தை பாய்ந்து வந்து பிடித்துவிடுகிறது. சினிமா காட்சிகளை விஞ்சும் நிஜக் காட்சிகளின் இந்த வீடியோ காண்போரை வியப்பின் உச்சத்துக்கே அழைத்துச் செல்கிறது.


மேலும் படிக்க | Viral Video: முதலையுடன் உப்பு மூட்டை விளையாடும் சிறுவன்... ரொம்ப தைரியம் தம்பி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ