Viral Video: நீ பயங்கர நாக பாம்பா இருக்கலாம்... ஆனா நாங்க பாலைவனக் கீரிகள்!

கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2023, 09:02 PM IST
  • சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன.
  • கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளது.
  • பார்த்தாலே அச்சத்தை கொடுக்கும் நாகப்பாம்பு உலகின் மிக கொடிய விஷ பாம்புகளில் ஒன்றாகும்.
Viral Video: நீ பயங்கர நாக பாம்பா இருக்கலாம்... ஆனா நாங்க பாலைவனக் கீரிகள்! title=

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அதிலும் நாகப்பாம்பு என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. இருப்பினும், பாம்பை அச்சமில்லாமல் தாக்கும் பல விலங்குகளும் உள்ளன. அதே போல் சில மனிதர்கள் கூட பாம்பை பிடிக்கும் பணியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான். சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன. அதில் முக்கியமான ஒன்று கீரி. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள். பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும்.

பார்த்தாலே அச்சத்தை கொடுக்கும் நாகப்பாம்பு உலகின் மிக கொடிய விஷ பாம்புகளில் ஒன்றாகும். ஆனால், கீரி அதனை மிக மூர்க்கமாக தாக்கும் திறன் கொண்டது. பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும். கீரி குட்டையான கால்களைக் கொண்ட ஒரு சிறிய விலங்கு என்றாலும், பாம்பை கண்டால் மூர்க்கமாக தாக்கும் இயல்பைக் கொண்டது. இந்நிலையில் பாம்புக்கும் பாலைவனக் கீரிக்கும் இடையிலான ஆக்கிரோஷமான சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: குட்டியை காக்க போராட்டும் பல்லி! கபளீகரம் செய்யும் பாம்பு!

வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:

நாகப்பாம்புடன் போடும் சண்டையில் பெரும்பாலும், கீரி தான் வெற்றி பெறும். சிறிது அரிதாகவே பாம்பு வெற்றி பெறும். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில், ஆப்பிரிக்காவில் உள்ள ஏதோ ஒரு காடு அல்லது பாலைவனத்தில் பாலைவனக் கீரி கூட்டத்திற்கும் நாகப்பாம்புக்கும் இடையே ஒரு போர் நடைபெறுவது காணலாம். அந்த வீடியோவில், கீரிகள் நாகப்பாம்பை தாக்க முயல்கின்றன, பாம்பு அவர்களை நோக்கி சீறிப்பாய்கிறது. வீடியோவில், பாம்புகள் நாகப்பாம்பால் சூழப்பட்டு, அதைத் தாக்கி வாலைப் பிடிக்க முயல்கின்றன. ஆக்கிரோஷமான சண்டையை காட்டும் இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 2020 இல் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏற்கனவே 19.2 ஆயிரம் பேர் பார்த்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. 

Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News