திடீரென்று சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் மாறிய வானம்! வைரலாகும் வீடியோ!
பெங்களூரு பகுதியில் திடீர் என்று வானம் இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் மாறியது. இதனை மக்கள் பலரும் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஒரு அரிய நிகழ்வு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்துள்ளது. பெங்களூரு நகர் முழுவதும் வானம் திடீரென்று மஞ்சள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி காட்சியளித்தது. இந்த அரிய காட்சி அந்த பகுதி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. முதலில் வளிமண்டல நிகழ்வாக இருக்குமோ என்று மக்கள் கருதினர், பின்னர் நீண்ட நேரம் இதே போல இருந்ததால் பலரும் ஆச்சரியத்துடன் கண்டு கழித்தனர். பலரும் தங்கள் மொபைல் போன்களில் இதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஹார் வகாசியா என்ற X பயனர் இந்த அரிய புகைப்படத்தை பகிர்ந்து, “பெங்களூரு வானம் மாயமானது! இந்த நிகழ்வின் பெயர் என்ன" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏன் இவ்வாறு ஏற்பட்டது என்று தெரிந்து கொள்ள பலரும் இதற்கான காரணத்தை இணையத்தில் தேடினர். பெங்களூரு பகுதியில் வால்மீன் C/2023 A3 (Tsuchinshan-ATLAS) காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஹாலியின் வால்மீன் போன்று அடிக்கடி நம் கண்களுக்கு தெரியாது என்றும், ஒரு குறிப்பிட்ட காலநிலையில் மட்டும் தான் நம் கண்களால் இதனை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வால்மீன் C/2023 A3 நீண்ட நேரம் பெங்களூரு பகுதிகளில் இருந்ததாக கூறப்படுகிறது.
பெங்களுரு பகுதியை சேர்ந்த ஒரு வானியல் இயற்பியலாளர் இது குறித்து விளக்கமளிக்கையில், "இது போன்ற வால்மீன்கள் நம்மால் எப்போதாவது ஒருமுறை தான் பார்க்க முடியும். இவை நம் சூரிய குடும்பத்தில் இருப்பவை கிடையாது. கிட்டத்தட்ட வெளியாட்கள் போன்றவை" என்று தெரிவித்துள்ளார். இந்த வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு ஜனவரியில் சீனாவில் உள்ள ஊதா மலை என்ற இடத்தில் முதன் முதலில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பெங்களூரு பகுதியில் காணப்பட்டது. நீங்கள் ஹைதராபாத்தில் வசிக்கிறீர்கள் என்றால் இன்று அல்லது நாளை ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
"இதோ ஒரு அற்புதமான காலம். கிட்டத்தட்ட 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு வால் நட்சத்திரம் நமது சூரியக் குடும்பத்தில் பிரமாண்டமாகத் தோன்றியுள்ளது. இந்த அற்புதமான வால் நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 129.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது" என்று வானியல் புகைப்பட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பெங்களூரில் உள்ள மக்கள் வால்மீன் C/2023 A3ஐ கண்டத்தில் இருந்து திகைப்பில் உள்ளனர். அதன் அழகான புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தில் ஸ்லோ-மோஷனில் நடந்த வாலிபர்! திக் திக் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ