)
Viral Video Of A Man Walking In Railway Tracks : உலகின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, அனைவரின் கைகளிலும் மொபைல் போனில் இருக்கிறது. இதனால், உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒருவர், இன்னொரு மூலையில் இருக்கும் வேறு ஒருவரிடம் பேசிக்கொள்ளலாம். இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த செல்போன்களை பயன்படுத்துபவர்கள், பல நேரங்களில் கிறுக்குத்தனமாக செய்யும் சில செயல்களால், அது பலருக்கு தவறான எடுத்துக்காட்டாக மாறி விடுகின்றது. ஒரு சிலர் பேர், தான் இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக பல விபரீத சாகசங்களை புரிந்து அதை வீடியோவாக எடுத்து இனையத்தில் பதிவேற்றுகின்றனர். இவை, பல சமயங்களில், “கரணம் தப்பினால் மரணம்” எனும் வகையிலும், சில நேரங்களில் “அய்யோ ஒரு வீடியோக்காக உயிர் போயிருச்சே..” எனும் வகையிலும் இருக்கிறது.
வைரல் வீடியோ:
இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் ரயில் நிலையத்தில் வந்து ரயில் நிற்கும் போது, அதன் முன் நின்று ஸ்லோ மோஷனில் நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கிறது.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 1, 2024
ட்ஃப் ஆரம்பத்தில் ரயில் வந்து நிற்கும் போது தண்டவாளத்திலேயே அப்படியே நிற்கும் அந்த வாலிபர், ரயில் அவர் அருகில் வந்த பின்பு கூட அசராமல் அப்படியே நின்றார். பின்னர் மெதுவாக, கேஷுவலாக நடப்பது போல பின்னால் திரும்பி பார்த்துவிட்டு நடந்து சென்று தண்டவாளத்தின் கம்பியின் மீது ஏறி நின்றார்.
இதற்கு தண்டனை உண்டா?
இப்படி இந்திய ரயில் நிலையத்தில் ரீல்ஸ் செய்வது பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கலாம். இதனால், அபராதம், ஃபைன், எச்சரிக்கை, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். அது எந்த வகையான க்ரைம் என்பதை பொறுத்து அமையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ