நடிகை சன்னிலியோன் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன் (Sunny Leone). அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் (Social Media) பரவலாக பேசப்பட்டு வருகிறார். 


மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். வரலாற்று கதையில் உருவாகும் இப்படத்தை வடிவுடையான் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, மலையாளத்திலும் 'ரங்கீலா'  (Rangeela) எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.  


இந்த படத்தை சந்தோஷ் நாயர் என்பவர் இயக்க பேக்வாட்டர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்மூட்டி நடிக்கும் 'மதுரராஜா' (Madhuraraja) படத்திலும் தமிழில் விஷால் (Vishal) நடித்த 'அயோக்யா' படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். 


ALSO READ | இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப படங்களை பகிர்ந்துக்கொண்ட சன்னி லியோன்


இந்நிலையில், நடிகை சன்னிலியோன் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் அவர் ஆரஞ்சு நிறத்தில் நீச்சல் உடை அணிந்து, நீச்சல் குளத்துக்குள் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரளாக பரவி வருகிறது. 



நடிகை தற்போது ரன்விஜய் சிங்காவுடன் (Rannvijay Singha) கேரளாவில் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட ‘Splitsvilla’ நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தி வருகிறார். ரன்விஜய் நடித்த ஒரு பூமராங்குடன் நிகழ்ச்சிக்கான தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார்.


சிக்னி சமீபத்தில் விக்ரம் பட் இயக்கிய தனது புதிய வலைத் தொடரான ‘Anamika’ படப்பிடிப்பை கிக்ஸ்டார்ட் செய்தார். அவர் வரவிருக்கும் தனது ‘Koka Kola’ படத்திற்கான படப்பிடிப்பை முடித்தார், இது ஒரு திகில் நகைச்சுவை.


நடிகை சன்னி லியோன் கடைசியாக ஜனவரி 8 ஆம் தேதி எம்.எக்ஸ் பிளேயரில் வெளியான 'புல்லட்ஸ்' என்ற வலைத் தொடரில் காணப்பட்டார். தேவாங் தோலகியா இயக்கிய, இதில் நடிகை கரிஷ்மா தன்னாவும் (Karishma Tanna) நடித்தார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR