SeePic: `உனக்காக காத்திருக்கிறேன்` மனம் திறந்தார் சன்னி லியோன்!
பாலிவுட்டின் `பேபி டால்` என அழைக்கப்படும் சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார். இந்தியா-கனடா அழகியான சன்னி தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொப்பாளராக அசத்தி வருகின்றார்.
இதற்கிடையில் அவ்வப்போது மாடலிங் பக்கமும் சென்று வருகின்றார். அந்த வகையில் பிரபல ஆன்லைன் வலைதளமான Hipcastle-ன் விற்பனை பொருட்களுக்கு விளம்பரம் மாடலாக தற்போது போஸ் கொடுத்துள்ளார். உனக்காக காத்திருக்கிறேன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின் மற்றம் அவரது கணவர் டேனியல் வெபர் திருமணம் செய்துக்கொண்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இத்தம்பதியருக்கு கடந்த மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது.
குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும் தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.
உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை உறுவாக்கியுள்ள சன்னி லியோன் விரைவில் வீரமாதேவி தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது!