வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளில் யானைகள் மிக விசாலமான தோற்றத்தைக் கொண்ட விலங்கு வகைகளில் ஒன்றாகும். யானைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஆனால், இவை மிக மிருதுவானவையும் கூட. இவை மிகவும் புத்திசாலி விலங்குகள். யானைகளின் பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. 


யானைகள் பொதுவாக மனிதர்களுடன் அன்பாக பழகுகின்றன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இவற்றுக்கு கோவம் வந்தால், அது மனிதர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடுகின்றது. 


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் யானை ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை உள்ளடக்கத்தை உருவாக்கிய வைஷ்ணவி நாயக் இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோவின் துவக்கத்தில், வைஷ்ணவி நடனமாடுவதைக் காண முடிகின்றது. அப்போது எதிரே நிற்கும் யானையை நோக்கி கேமரா செல்கிறது. அந்த யானையும் வைஷ்ணவி போலவே தலையை ஆட்டி ஆடுவதை வீடியோவில் காண முடிகின்றது. இது மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் தெரிகிறது.


ஆனால், இந்த அன்பான யானை சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. இது வீடியோ பார்ப்பவர்களை சிறிது சோகத்திலும் ஆழ்த்துகிறது. 


மேலும் படிக்க | பன்னியை முழுசாக ஒரே நொடியில் விழுங்கிய 30 அடி நீள ராட்சத அனகோண்டா: வைரல் வீடியோ


கியூட் யானையின் வீடியோவை இங்கே காணலாம்: 


 



மக்களிடமிருந்து கலவையான கருத்துகள்


இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், ஏராளமான கமெண்டுகளையும் பெற்றுள்ளது. கருத்து பெட்டியில் பல்வேறு வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன. சில இணையவாசிகள் யானையின் நடனத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும், சில பயனர்கள் யானையை இப்படிக் கட்டியிருப்பதைப் பார்த்து கோபமடைந்தனர். "இது நடனம் அல்ல! யானைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் சங்கிலியால் பிணைக்கப்படும்போது இதுபோன்ற நடத்தைகளைக் காட்டுகின்றன.. அவற்றின் உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம்." என ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


மேலும் படிக்க | யூனிஃபார்மில் சிறுவன் ஆடிய ஆட்டம்.. அந்த ரியாக்‌ஷன்.. சான்சே இல்ல: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ