புதுடில்லி: IPL 2021 இல் சில அணிகளில் சில வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவிய பிறகு, போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. பிசிசிஐ எடுத்த இந்த முடிவைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இப்போது அவரவர் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது IPL நடக்காததால், வீரர்களுக்கு அவர்களுக்கு வேண்டியவற்றை செய்ய நேரம் கிடைத்துள்ளது. கிரிக்கெட் ஆடாத இந்த நேரத்தில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீரர்கள் பல வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல, சுரேஷ் ரெய்னாவும் அத்தகைய ஒரு முக்கியமான வேலையில்தான் ஈடுபட்டுள்ளார். 


சமையலில் ஈடுபட்டார் சுரேஷ் ரெய்னா


சுரேஷ் ரெய்னா (Suresh Raina) தற்போது தனது குடும்பத்துடன் உள்ளார். அவர் ஒரு வேடிக்கையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா சமையலறையில் கடி தயாரிப்பதைக் காண முடிகிறது. கடி என்பது மோர் குழம்பு வகையாகும். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பி காண்கிறார்கள். 



இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சுரேஷ் ரெய்னா, "கடி நேரம்!! அக்காவின் ஸ்பெஷல் ரெசிபி." என்று எழுதியுள்ளார். மேலும், இந்த வீடியோவில், ரசிகர்களை வீட்டிலேயே இருக்குமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  



ALSO READ: Breaking: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று


சென்னை அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி 


IPL அணியான CSK-வின் நிர்வாகம், மைக்கேல் ஹஸ்ஸியை விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு மூத்த அதிகாரி ஏ.என்.ஐ-யிடம் கூறுகையில், "பேட்டிங் பயிற்சியாளர் மைக்கே ஹஸ்ஸி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரது நிலைமையை சிறப்பாகக் கையாள, அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்றார். 


இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் தடை உள்ளது. ஆகையால், IPL-லில் பங்குகொண்ட ஆஸ்திரேலிய வீரர்களை, சார்டர்ட் விமானம் மூலம் மாலத்தீவுகள் அல்லது இலங்கை வழியாக ஆஸ்திரேலியா அனுப்புவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவிலிருந்து கிளம்பும் முன், ஹஸ்ஸிக்கு தொற்று குணமாகி, அவரிடம் நெகடிவ் சான்றிதழ் இருக்க வேண்டும். 


முன்னதாக, கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு BCCI, IPL போட்டிகளை ஒத்தி வைத்தது.


ALSO READ:பரபரப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR