உயிரோட விளையாடாதீங்க, IPL ஐ உடனடியாக நிறுத்துங்க, முன்னாள் வீரர் கோரிக்கை

IPL 2021 போட்டி ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளது. ஐ.பி.எல். இல் கொரோனா உள் நுழைந்த பின்னர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் ஒரு பெரிய அறிக்கை அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 11:10 AM IST
உயிரோட விளையாடாதீங்க, IPL ஐ உடனடியாக நிறுத்துங்க, முன்னாள் வீரர் கோரிக்கை title=

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கொரோனா வைரஸ் உள் நுழைந்த பிறகு பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிகள் ரத்து செய்யப்படும் என்ற தக்கவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். இல் கொரோனா உள் நுழைந்த பின்னர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் ஒரு பெரிய அறிக்கை அளித்துள்ளார்.

வீரர்களின் உயிருக்கு ஆபத்து
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கருத்துப்படி, வீரர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஐபிஎல் (IPL) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேகேஆர் (KKR) வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது பயோ பபுளில் பாதுகாப்பின்மையை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

ALSO READ | IPL 2021 இல் கொரோனா வைரஸ் பீதி, BCCI ஆலோசிப்பதாக தகவல்!

 

ஐபிஎல் 2021 உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
இந்த கடினமான சூழலிலும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த BCCI  தீவிரமாக இருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்கள் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு கொண்டாட்டத்தை அளித்து வருவதாக தான் நம்பியதாகவும் ஆனால் தற்போது கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா (Coronavirus) பாதித்துள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் முன்வைத்துள்ளார். 

ஐ.பி.எல்லின் 30 வது போட்டி ஒத்திவைக்கப்பட்டது
ஐபிஎல் 2021 இன் 30 வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே நடைபெற இருந்தது, ஆனால் திங்களன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டதால், உடனடியாக அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News