அமேசான் இந்தியா திங்களன்று 'பென்குயின்' என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸரை வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகளவில் OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வெளிச்சம் போடுவதாகவும், நம் ஒவ்வொருவர் பின் நிற்கும் உந்துசக்தியான ஒரு தாயை பற்றிய கதையாக இருக்கும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


‘மாரி -2’ திரைப்பட வில்லனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது...


படத்தின் டீஸரை பார்க்கையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் ஒரு சமூக செய்தியுடன் ஒரு அதிரடித் தோற்றமளிக்கும் ஒரு தாயின் பாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிகிறது. மேலும் ஒரு தாய் தனது குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கும் உணர்ச்சி பயணத்தை வெளிக்காட்டுகிறது.



கார்த்திக் சுப்பராஜ்-ன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்கனவே தூண்டியுள்ளது. இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு முன்பு வெளியான இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது ரசிகர்களிடைய பேராதரவை பெற்றுள்ளது எனலாம், இதன் வெளிப்பாடாகவே இந்த டீஸர் இதுவரை யூடூபில் சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.


தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மனதில் வைத்து அமேசான் பிரைமில் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் படத்தை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?


இத்திரைப்படத்தை ஈஷவர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.


ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான பிறகு OTT மேடையில் வெளியாகும் இரண்டாவது தென்னிந்திய படம் 'பென்குயின்' என்பது குறிப்பிடத்தக்கது.