'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?

'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள நடிகரின் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் துருவும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated: Jun 8, 2020, 10:20 PM IST
'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... என்ன தெரியுமா?

'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள நடிகரின் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் துருவும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டோலிவுட் படமான அர்ஜுன் ரெட்டி-யின் ரீமேக் திரைப்படமான ஆதித்யா வர்மா மூலம் தமிழ் திரையுலகிற்கு துருவ் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது தனது தந்தையுடன் அடுத்த திரைப்படத்தில் திரையை பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார்.

அசர வைக்கும் காட்சிகளுடன் வெளியானது 'ஆதித்யா வர்மா' trailer!...

விக்ரமும் - துருவும் திரையை பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்... "ஜாகமே தந்திரம் திரைப்படத்திற்குப் பிறகு எனது அடுத்த இயக்கம்.... '#CHIYAAN60'... அற்புதமான சியான் விக்ரம் சார் மற்றும்  துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே துருவ், தனது தந்தையின் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில், தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "இது எனது கனவு நனவாகும் தருணம், தயவுசெய்து என்னை எழுப்ப வேண்டாம்" என்று அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கோப்ரா படத்தின் First Look வெறித்தனமான சம்பவம்.. காத்திருக்கும் ரசிகர்கள்!!...

"கார்த்திக் சுப்பராஜ் படத்தின் FDFS பார்க்க நான் எப்போதும் உற்சாகமாக இருப்பவன், அனிருத்தின் ஆல்பங்களை நான் எப்போதும் லூப்பில் கேட்பவன். என் அப்பாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அனைத்து கனவும் நினைவாகும் தருணம் இது.

இது எனது கனவு என்றால், தயவுசெய்து என்னை எழுப்ப வேண்டாம்!" என்று துருவ் தனது பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் ஒரு கேங்க்ஸ்டராக நடிப்பார் என்றும் அவரது மகன் நடிகரின் இளைய பிம்பமாக நடிப்பார் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்ரம் தனது முந்தைய படங்களான கடாரம் கொண்டான், சாமி ஸ்கொயர் மற்றும் ஸ்கெட்ச் போன்ற திரைப்படங்களில் மோசமான விமர்சனங்களையும், மோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் பெற்றதால் வரும் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.