நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவி-யை கண்டித்து எம்.ஆர்.சி அலுவலகத்தை தற்போது முற்றுகையிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இதை தொடர்ந்து, தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இரண்டு பேர் அமிதாப் உயரத்தையும் சூரியாவின் உயரத்தையும் ஒப்பிட்டு, 'அமிதாப்புடன் சூர்யா நடிக்கும் போது ஸ்டூல் மீது ஏறி நின்று தான் நடிக்க வேண்டும் என்று கலாய்த்தனர்.


இவர்களின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, பிரபலங்கள் கருணாகரன், விஷால், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.


இந்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள், சன் மியூசிக் சேனலை கண்டித்து , நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவியை கண்டித்து எம்ஆர்சி அலுவலகம் முன் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இதைதொடர்ந்து, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருந்தது:-  தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள் சமூகம் பயன்பெற. என்று கூறியிருந்தார். 



பின்னர், நடிகர் சூரியா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்த பதிவை நீக்கியுள்ளார்.