சமீபத்தில் நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டின் சையத் முஷ்டாக் அலி டிராபி பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இறுதி போட்டியில் வென்ற தமிழக அணி அந்த வெற்றியை கொண்டாடிய விதமும் டிரெண்ட் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்த போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், தினேஷ் கார்த்திக்கின் தலைமையின் கீழ் இந்த போட்டியில் தமிழகம் வென்றதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.


தமிழகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட நடராஜன், மாநிலத்தில் உள்ள திறமையின் ஆழத்தை எடுத்துரைத்தார். அணியின் சாதனை குறித்து தான் மிகவும் பெருமைப்படுவதாக கூறிய நடராஜன், தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான தலைமைத்துவத்தைப் பாராட்டினார்.



தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) அவருக்கு பின்வரும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பதிலளித்தார்.


தினேஷ் கார்த்திக் டி நடராஜனின் பதிவிற்கு நன்றி தெரிவித்தார். தனது சக அணி வீரரான நடராஜன் கனவுகளை நம்பி அவற்றை நோக்கி பயணம் செய்ய விரும்பும் எதிர்கால தலைமுறையினருக்கு தேவையான ஊக்கத்தை அளிப்பார் என தான் நம்புவதாக கார்த்திக் தெரிவித்தார்.



ALSO READ: Watch: ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அட்டகாச நடனம் ஆடிய TN Players! வைரலான Video!!


டி நடராஜன் (T Natarajan) சில மாதங்களுக்கு முன்பு வலை பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்றார். இருப்பினும், சுற்றுப்பயணம் முடிந்த நேரத்தில், அவர், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என அனைத்து வடிவங்களிலும் அறிமுகமாகி இருந்தார்.


நடராஜன் ஆஸ்திரேலிய (Australia) சுற்றுப்பயணத்தில் தன் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தியா அடைந்த வெற்றியில் அவருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில், பல திறமையான வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்துள்ளனர்.


சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக இந்திய டி 20 அணியில் நுழைந்த வருண் சக்ரவர்த்தி அதில் ஒருவர். இருப்பினும், சக்ரவர்த்திக்கு கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, மற்றொரு தமிழக வீரரான டி நடராஜனுக்கு அணியில் சேர வாய்ப்பு கிடியத்தது.


இந்தியாவின் 2020-21 பார்டர்-கவாஸ்கர் டிராபி வெற்றியில் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.


ALSO READ: கால்பந்து நட்சத்திரம் Neymar, பாரிஸ் செயிண்ட்டுடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பது ஏன்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR