'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. சென்ற வெள்ளி கிழமை வெளியான இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்ப்பு பெற்று நல்ல வசூல் அள்ளி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பக்கம் செம ரெஸ்பான்ஸ் பெற்று வரும் இப்படத்திற்கு மறுபக்கம் விமர்சனமும் எழுந்துள்ளது. சினிமா இயக்குனர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை இந்த படத்திற்கு எதிராக கருந்து கூறிவிட்டனர்.


இந்நிலையில் தற்போது இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், படத்தில் கண்டெண்ட் இருந்தால் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என கூறுகின்றனர். ஆனால் 3 செக்ஸ் காமெடி படங்கள் நல்ல துவக்கத்தை பெற்று வாரநாட்களிலும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. அது என்ன காட்டுகிறது? அடல்ட் காமடியை நான் எதிர்க்கவில்லை! ஆனால் இந்த நம் இளைஞர்களின் மனநிலையில் புரிந்துகொள்ள முடியவில்லை " என கூறியுள்ளார்.