கடந்த மார்ச் 1 முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 48 நாட்களாக புதிய படங்கள் எதுவும் திரைக்கு வெளியாகவில்லை, மேலும் அனைத்து படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்நிலையில் இதற்கு தீர்வு காண்பதற்காக நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.


இதில் பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நிர்வாகிகள் கதிரேசன், பிரபு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கேயார் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். 


தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரை உலக பிரச்சினைகள், தியேட்டர் அதிபர்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 9 மணிக்கு சுமுகமாக முடிவுக்கு வந்தது.


 



 



 



 



 



 



 



 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,


சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வரும் நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றவர்.


மேலும் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து ஏப்ரல் 18 முடிவு எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்தார். இதனால், வரும் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு வெள்ளிக்கிழமை படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.