Martial Arts: சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்
தமிழகத்தின் இந்த மணமகள் தனது தற்காப்பு கலையால் சமூக ஊடகங்களில் வைரலாகிறார். தாலி கட்டிக்கொண்ட சிறிது நேரத்திலேயே சிலம்பத்தை சுழற்றி அதிரடி மணமகள் என பெயர் எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாகிறார் சூப்பர் மணமகள் நிஷா...
திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே 30 நிமிடத்திற்கு தற்காப்பு கலை பற்றி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணப்பெண் ஒருவர் தற்காப்புக் கலைகளை செய்து காட்டினார்.
22 வயதான மணமகள் பி நிஷா என்ற தமிழ் பெண்ணுக்குக் திருமணம் நடைபெற்றது. மணம் முடித்த சில நிமிடங்களில், தனது திருமண சேலையுடனே, ஆதிமுரை எனப்படும் தற்காப்பு கலைகளை செய்யத் தொடங்கினார்.
திருக்கோலுவில் உள்ள திருமண மண்டபத்தின் முன் இருந்த சாலையில், ‘இரட்டை கம்பு’ செய்ய ‘சுருள் வாள் வீச்சு’, சிலம்பம் என தற்காப்புக் கலைகளை செய்துக் காட்டினார். சிலம்பை எடுத்துக் கொண்டு அவர் செய்த பயிற்சிகள் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது…
பி.காம் பட்டதாரியான நிஷா போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறார். தனது 30 நிமிட தற்காப்புக் கலை பயிற்சி, இது குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நிஷா கருதுகிறார்.
“புடவையில் இப்படி பயிற்சிகளை செய்வது எளிதல்ல என்று கூறுகிறார். மணமகள் அலங்காரத்தில் இப்படி பயிற்சி செய்தது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தான். வழக்கமாக சட்டை மற்றும் டிராக் பேண்டில் தான் தற்காப்பு கலைகளை பயிற்சி செய்வேன்" என்று நிஷா தெரிவித்தார்.
பாரம்பரிய தற்காப்புக் கலைகளான ‘சிலம்பம்’, ‘சுருள் வாள்’, ‘ஆதிமுரை’, ‘களரிப்பையாட்டு’, ‘தீப்பந்தம்’ போன்றவற்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக் கொள்ளத் தொடங்கியதாக நிஷா கூறுகிறார். நிஷாவைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் தற்காப்புக் கலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியம் ஏற்படுத்தினார்கள்.
Also Read | ஆறரை அடி கூந்தல் அழகியின் கூந்தல் பராமரிப்பு Tips
தனது பெற்றோர் தான் தற்காப்புக் கலைகளைக் கற்க ஊக்குவித்ததாக நிஷா கூறுகிறார். நாடுகுட்டுதங்காடு (Nadukutudankadu village) கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மரியப்பன் இலவசமாகப் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருகிறார். அவரிடம் கலைகளை கற்றுக் கொள்ளும் சுமார் 80 பேரில் நிஷாவும் ஒருவர். பல உள்ளூர் சிலம்பம் போட்டிகளில் வென்றிருக்கும் நிஷா, கடந்த ஆண்டு சிலம்பத்தில் மாவட்டத்தில் முதல் பரிசை வென்றுள்ளார். திருப்பூரில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
நிஷாவின் கணவர் ராஜ்குமார், ஒரு விவசாயி. தனது மனைவியின் தற்காப்பு கலை ஆர்வத்திற்கு அவர் ஆதரவு கொடுக்கிறார். "இளம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சடங்குகளுக்குப் பதிலாக தற்காப்பு கலை பயிற்சிகளை செய்ய விரும்பினோம். பெண்களிடையே இதுபோன்ற தற்காப்புக் கலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும். இது தைரியத்தை அதிகரிக்கும். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவம், தற்கொலைகள் போன்ற சம்பவங்கள் நடக்காது" என்று அவர் கூறினார்.
பெண்கள் தற்காப்பு கலைகளை பயிற்சி செய்தால் தற்கொலை போன்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள், ஏனெனில், இதுபோன்ற தற்காப்புக் கலைகள், உடலை மட்டுமல்ல, மனதையும் பலப்படுத்துவதோடு வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் தருகிறது.
Also Read | Health News: உங்கள் குழந்தை Super Star ஆக ஜொலிக்க உணவில் சேருங்கள் Omega-3!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR