மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவத்தில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர் தன் செல்லப்பிராணிக்காக ஒரு சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். இந்த நபர் மற்றும் அவரது செல்லப் பிராணியான நாயின் கதை ஒரு சுவாரசியமான கதை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீரா என்ற நான்கு வயது நாய்க்கு சமீபத்தில் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. ஐ.டி துறையில் பணிபுரியும் காயத்ரி என்ற விலங்குகள் மீது அலாதி பற்றுடைய பெண் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டார். வீராவின் இரு கால்களில் ஏற்பட்ட காயத்தால் அது மிகவும் மோசமான ஒரு நிலையில் இருந்தது. இதைப் பார்த்து மனம் வருந்திய காயத்ரி, தனது தந்தையுடன் சேர்ந்து வீராவிற்காக ஒரு பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்தார். காயத்ரி ஒரு மெகானிக்கல் எஞ்சினியர் என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் மக்களை பிரித்து வைத்துள்ளது. அனைவரும் தனி மனித இடைவெளியையும் தனிமைப்படுத்தலையும் பின்பற்றி தனித்தனியே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேளையில்தான வீரா என்ற அந்த நாய்க்கு (Dog) ஆதரவாக காயத்ரி செயல்பட்டார். வீராவை ஒரு உள்ளூர் விலங்கு ஷெல்டரில் பார்த்தவுடனேயே காயத்ரிக்கு பிடித்துப்போனது.


தனக்கு செல்லப் பிறாணிகளை (Pet Animals) பராமரிக்க எப்போதும் ஆர்வம் உண்டு என்றும், ஆனால், படிப்பு, வேலை என்ற இந்த பிஸியான பணிகளால் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றும் கூறினார்.


இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, வீட்டிலிருந்து வேலை செய்வதும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதும் புதிய இயல்பாக மாறியது. காயத்ரிக்கு வீட்டில் இருக்க நிறைய நேரம் கிடைத்தது.


ALSO READ: வைரல் வீடியோ: பாகிஸ்தான் பத்திரிகையாளரிடம் யானை செய்த சேட்டை


"ஒரு நாயை வளர்க்க இதுதான் சரியான நேரம் என்று நான் உணர்ந்தேன்," என்று காயத்ரி ANI-யிடம் கூறினார். ஒரு விபத்தின் காரணமாக வீராவின் இரு கால்களும் நீக்கப்பட்டன என்பது தெரிந்தேதான் தான் வீராவை தத்தெடுத்ததாக காயத்ரி தெரிவித்தார்.


வீராவுக்காக ஒரு சக்கர நாற்காலியை (Wheel Chair) உருவாக்குவது அவரது தந்தைக்கு வந்த யோசனை என்றும் அவர் தெரிவித்தார்.


ஏ.என்.ஐ.யிடம் பேசிய காயத்ரியின் தந்தை காஷி, வேறு யாரும் வீராவை தத்தெடுக்காததால் அவர்கள் வீராவை தத்தெடுத்ததாக கூறினார். "இது விலங்கு துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கு போல் தோன்றியது. மேலும் அந்த நாயின் இயலாமை காரணமாக அது தத்தெடுக்கப்படவில்லை. யாரும் அதை வளர்க்க முன்வரவில்லை. அதனால்தான் நாங்கள் வீராவை தத்தெடுத்தோம்” என்று காஷி கூறினார்.


வீரா என்ற அந்த நாய், தற்போது தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கம் என தந்தையும் மகளும் பெருமையுடன் கூறுகின்றனர். 


ALSO READ: Viral news: பழங்குடி குழந்தைகளுக்காக 18 km தினமும் படகோட்டிச் சென்ற அங்கன்வாடி பெண்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR