அமைச்சர் செல்லூர் ராஜு 2012-ம் ஆண்டே இறந்துவிட்டதாக அறிவித்த கூகுள்
தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்துவிட்டதாக, கூகுள் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
செல்லூர் ராஜு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சார்ந்தவர். 2011-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராக அப்போதைய முதல்-அமைச்சர் செல்வி ஜெயலாலிதா நியமித்தார். மீண்டும் 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
நீர் ஆவியாமாகால் தடுக்க அணையில் தெர்மாகோளை போட்டு மூடி, ஒரேநாளில் சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலமானர். அதேபோல வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம், அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே அரசாங்கத்தின் எந்தவித உதவியும் பெற முடியும் என பல சர்சைகளை உருவாக்கியவர்.
இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.