மிகவும் அசாதாரணமான மற்றும் நிச்சயமாக தேவைப்படும் ஒரு நடவடிக்கையில், தமிழகத்தின் ஒரு மாவட்டம், COVID-19 - க்கு எதிராக மிகவும் மாறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்., இது தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள தென்னம்பாளயம் சந்தைக்கு வெளியே அமைக்கப்பட்ட ஒரு சிறிய சுரங்கப்பாதை (கிருமிநாசினி சுரங்கப்பாதை) பற்றிய செய்தி தான். மூன்று முதல் ஐந்து வினாடிகள் மக்கள் இந்த சுரங்கத்தின் வழியாக நடக்கும்போது அது கிருமி நீக்கம் செய்யும் வேலையில் துரிதமாக செயல்படுகிறது.



இந்த சுரங்கப்பாதையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார். சுரங்கப்பாதை வழியாக செல்லும் நபர்களின் வீடியோவையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார், மேலும் தற்காலிக வழிப்பாதை இந்தியாவில் "இதுவே முதல்" என்று எழுதியுள்ளார். இதுகுறித்து விஜயகார்த்திகேயன் மேலும் கூறுகையில், சந்தையில் நுழையும் மக்கள் கைகளை கழுவ வேண்டும், பின்னர் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


ஒரு நாள் முன்பு பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு டன் பாராட்டுக்குரிய கருத்துகளையும் பெற்றுள்ளது.



இதுகுறித்து ட்விட்டரில் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ள பயர்கள் குறிப்பிடுகையில்., "நல்ல கண்டுபிடிப்பு, ஐயா" என்று குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு நபர் "புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் புதுமையான யோசனை ஐயா" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.



சுரங்கப்பாதையின் உள்ளே மூன்று முனைகளின் இரண்டு தொகுப்புகள் உள்ளன, அவை 1% சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை மக்கள் நடக்கும்போது தெளிக்கின்றன. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில்., "[மேற்பரப்பில்] தொடர்பு கொண்டபின், வைரஸைக் கொல்லும் அளவுக்கு இது திறமையானது" என்று ஊடக இல்லத்திடம் அதன் செயல்பாட்டை விளக்கினார். இருப்பினும், வழக்கமான கை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இது ஒரு துணை என்றும் அவர் குறிப்பிட்டார்.