2008 ஆம் ஆண்டு பாலிவுட் படமான "ஹார்ன் ஓகே ப்ளீஸ்" (Horn ok pleassss) என்ற இந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தனுஷரி தத்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா படேகர், தகாத இடங்களில் கை வைத்தார். என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதைப்பற்றி படக்குழுவினரிடம் முறையிட்டேன். ஆனால் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. மாறாக நானா படேகருக்கு ஆதரவாகவே பேசினார்கள். நானா குறித்து தவறாகப் பேசக் கூடாது என்று மிரட்டினார்கள். எனது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. அடியாட்களால் நான் வலுக்கட்டாயமாக படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் என தனுஷரி தத்தா கூறினார். அவர் தாக்கபட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து தேசிய மகளிர் கமிஷன் சார்பாக நடிகர் நானா படேகர் மற்றும் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது. இந்த வழக்கை பதிவு செய்த வழக்கறிஞர் கோரவ் குலாடி ஒரு சமூக சேவகரும் ஆவார்.



இவரிடம் Zee News Digital சார்பாக பேசியபோது, இந்த வழக்கு இன்று தான் பதிவு செய்யப்பட்டது என வழக்கறிஞர் கோரவ் குலாடி கூறினார். மேலும் எங்களை பொருத்த வரை இந்த வழக்கு கூடிய சீக்கரத்தில் விசாரிக்க பட வேண்டும். அதுவும் டெல்லியில் நடைபெற வேண்டும். ஏனென்றால் மும்பையில் நடைபெற்றால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதே பகுதியை சார்ந்தவர்கள், எனவே வழக்கில் இருந்து தங்களை பாதுகாக்க முயற்ச்சி செய்யக்கூடும். 


மும்பையில் இருக்கும்  தனுஷரி தத்தா தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறார். அவரை தாக்க சில கும்பல் முயற்ச்சி செய்தது. சரியான நேரத்தில் மும்பை போலிசார் அவருக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கியதால் அவர் தாக்குதலில் இருந்து தப்பித்தார். இதனால் வழக்கு டெல்லியில் நடைபெற்றால் சரியாக இருக்கும் என வழக்கறிஞர் கோரவ் குலாடி கூறினார்.