14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவும் ஆனது. அதேபோல வங்களாதேஷ் அணி விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 


இந்திய அணியை பொருத்த வரை 6 முறை ஆசியா கோப்பையை வென்றுள்ளது. இம்முறையும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி ஆட இருக்கிறது.


இந்தநிலையில், இந்திய அணி வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு செல்ல பஸ்ஸில் ஏறினார்கள். அப்பொழுது வீரர்கள் ஹோட்டலில் இருந்து வெளியே வரும் போது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முன்னால் கேப்டன் எம்.எஸ்.தோனி வெளியே வரும் போது, அங்கிருந்த ரசிகர் அவர் மீது பூக்களை தூவி வரவேற்றார். அந்த பூக்களை அழகாக கேட்ச் பிடித்த தோனி, ரசிகர் மீது பூக்களை தூவி, சிரித்தப்படியே பஸ்ஸில் ஏறினார்.