OMG... மீண்டும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி..
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் ஒருவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் ஒருவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகை ஸ்ரீ ரெட்டி ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துவரும் பிரபலங்கள் மீது ஆதாரத்துடன் கூடிய குற்றங்களை இணையத்தில் தெரிவித்துவந்தார். இதனால், தெலுங்கு நடிகர் சங்கம் இவரை சங்கத்திலிருந்து நீக்கியது மட்டும் இன்றி படங்களில் நடிக்கவும் தடைவிதித்தது. இதனை எதிர்த்து நடிகை ஸ்ரீரெட்டி, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விதித்தது. பின்னர் தெலுங்கு நடிகர் சங்கம் அந்த தடையை நீக்கியது. இதையடுத்து, தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வந்தார்.
தமிழ் லீக்ஸ் (#tamilleaks) என்ற ஹேஸ்டேக் மூலம் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால் மற்றும் நடிகரும், நடன மாஸ்டரான ராகவா லாரன்ஸ் என பல பிரபலங்கள் குறித்து புகார்களை தெரிவித்தார்.
ஸ்ரீரெட்டி கடந்த சனிக்கிழமை (26/10/2018) ஃபேஸ்புக் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “பல ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய அந்த நபர் மீடியா முன்பு புத்திசாலித்தனமாக பேசி வருகிறார். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் உள்ள ஆதாரங்கள் மூலம் வழக்கறிஞர்களின் உதவியுடன் அவருடைய முகத்திரையை விரைவில் வெளியே கொண்டு வருவேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை வைத்துக் கொண்டு அவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும். விரைவில் திருமணமாகவுள்ள அவர் நம்பர் ஒன் பிளாக் மெயிலர். விரைவில் அவருக்கு சிறை காத்திருக்கிறது.
பெரிய பதவியை கையில் வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை மிரட்டி வருகிறார். தயாரிப்பாளர்கள் கோபப்பட்டால் அந்த நபரின் பதவி ஆட்டம் கண்டுவிடும். அவரால் பல சின்ன தயாரிப்பாளர்கள் பல துன்பங்களை அடைந்துள்ளார்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.