Python Vs Calf Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான மற்றும் வினோதமான விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் ஒரு களம்.. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்க முடியும். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில நேரம் புன்னகைக்க வைக்கின்றன, சில நேரம் யோசிக்க வைக்கின்றன, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில நேரம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில நேரம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்பு வீடியோக்கள் என்றால் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெரிய மலைப்பாம்புக்கும் கன்றுக் குட்டிக்கும் இடையே நடக்கும் சண்டை நடக்கிறது. உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் இந்த  போராட்டம் பதபதைப்பையும், அச்சத்தையும் உண்டாகுகின்றன.  இந்த வைரல் வீடியோ மலைப்பாம்புக்கும், கன்றுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும், அதனை காப்பாற்ற துடிக்கும் தாய் பசுவையும் காணலாம்.  மலைப்பாம்பு கன்றினை சுற்றி கடுமையாக இறுக்கி பிடித்து கபளீகரம் செய்யத் துடிப்பதையும் வீடியோ காட்டுகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்து தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ இன்ஸ்டாகிராமின் Bbilal.ahm4d என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 


மலைப்பாம்பு கன்றினை கபளீகரம் செய்யத் துடிக்கும் வைரல் வீடியோ: 


 



 


பாம்புகளில் மிகவும்  சக்திவாய்ந்த மற்றும் பயங்கர தோற்றத்தை கொண்ட மலைப்பாம்பின் ஆபத்தான மற்றும் இரத்தக்களரியான சண்டை பீதியை கிளம்ப்புவதாக  உள்ளது. மேலும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கன்றும் அதன் தாயும்  போரிடும் தருணங்கள் மிகவும் அச்சமூட்டுபவையாக உள்ளன. இந்த வீடியோவின் முடிவுவரை, மலைபாம்பு தனது பிடியை விடாமல் கன்றினை சுற்றி வளைத்திருப்பதைக் காணலாம். அதனை சுற்றி சுற்றி வரும் பசு எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என துடிக்கிறது. சுற்றிலும் பல பசுக்கள் இருப்பதையும், அங்கே சில மனிதர்கள் இருப்பதையும் காணலாம்.


மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!


சமீபத்தில் சில நாட்களுக்கு முன், தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பாம்பின் பெயரை கேட்டால் நூறு காத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 


மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ