தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய டெஸ்லா கார்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
சீனாவில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய டெஸ்லா காரின் வீடியோ காண்போரின் நெஞ்சை பதறவைக்கிறது.
சீனாவில் டெஸ்லா கார் பிரேக் பிடித்தும் நிற்காமல் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் சாலையில் சென்றவர்கள் மீது மோதிய அந்த கார், மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி நின்றுள்ளது. அந்த கார் சாலையில் ஓடும்போது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காரை ஓட்டிச் சென்ற உரிமையாளர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
காவல்துறை விசாரணையில் கார் ஓட்டியவர் மது அருந்தவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் டெஸ்லா கார் பிரேக் பிடித்தும் நிற்கவில்லை என கூறப்படுகிறது. பிரேக் பிடிப்பதற்கான லைட் காரில் எரிவதை சிசிடிவி வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த வீடியோவில் முதலில் கார் ஓர் இடத்தில் பார்க் செய்ய மெதுவாக செல்கிறது. அப்போது அங்கு நிற்காத கார் திடீரென சாலையில் அதிவேகத்தில் பயணிக்கிறது. இடையில் ஒருவர் மீது மோதும் அந்தக் கார், மற்றொரு இடத்தில் ஒரு வாகனம் மீது நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்திவிடுகிறது.
சுமார் 44 நொடிகள் இருக்கும் டெஸ்லா காரின் விபத்து வீடியோ காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. இது குறித்து சீன அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டெஸ்லா கொடுத்துள்ள விளக்கத்தில், கார் ஒட்டுநர் முறையாக பிரேக் பிடிக்காத காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. சீனாவில் இருக்கும் கார்களில் பொதுவாக ஓட்டுநர் கால் வைக்கும் பகுதியில் மேட் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மேட் காரணமாக கூட பிரேக் பிடிக்காமல் இருந்திருக்கலாம் என சிலர் கூறினாலும், டெஸ்லா காரின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதாக வல்லுநர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ