ஒரு துறையின் சூப்பர் ஸ்டார் மற்றொரு துறையின் சூப்பர் ஸ்டாரை சந்தித்தால், ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பற்றி கேட்க வேண்டுமா? தமிழ் சினிமாவின் 'தளபதி' விஜய்யும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனும், தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் 'தல' தோனியும் சந்தித்துக்கொண்ட அந்த அரிய நிகழ்வு இன்று, ஆக்ஸ்ட் 12 அன்று சென்னையில் நடந்தது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இருந்ததால் இந்த சந்திப்பு சாத்தியமானது. இந்த சந்திப்பின் படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


தோனி (MS Dhoni) சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் ஒரு  விளம்பரத்திற்காக படப்பிடிப்பில் இருந்தார். அதே ஸ்டூடியோவில் நடிகர் விஜய்யும் 'பீஸ்ட்' பட ஷூட்டிங்கில் இருந்தார். தோனி, தளபதி விஜய்யை அவரது வேனில் சென்று சந்தித்தார். 




ALSO READ: ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு


விஜய்யின் (Vijay) வேனில், இந்தியாவின் மிகப் பிரபலமான இரண்டு சூப்பர் ஸ்டார்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பின்னர் விஜய் தோனியுடன் அவரது வேனை நோக்கி நடந்து வந்தார்.


இருவரது சந்திப்பின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானவுடன், அவை காட்டுத்தீ போல் பரவின. சிலர் இதை 'Pic of the Day' என்றும் கூறி வருகின்றனர்.


திங்கள்கிழமை இரவு சென்னை வந்த தோனி, ஐபிஎல் 2021 ஆம் (IPL 2021) ஆண்டின் இரண்டாம் கட்டத்தில் விளையாட, CSK அணியின் சில வீரர்களுடன் இன்னும் இரு நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதன் காரணமாக சென்னையில் மீண்டும் ஒன்று கூடி வருகின்றனர்.


ALSO READ: Beast Update: பீஸ்ட் படத்தில் தனுஷ்


தல தளபதி சந்திப்பை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினர். சில ட்வீட்டுகள் உங்கள் பார்வைக்கு. 






உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR