சமீப காலமாக இணையத்தினை கலக்கி வரும் T-shirt shirt எப்படி இருக்கும் என தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர்கள் இடையே தற்போது பலவிதமான ஆடைகள் ட்ரெண்ட்-ஆகிவருகிறது. அதும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ஆடையில் கலெக்சன்ஸ் அதிகம். 


இந்நிலையில், பெலேன்சியாகா என்னும் ஃபேஷன் நிறுவனம், 2018-ம் ஆண்டுக்கான இலையுதிர் கால கலெக்‌ஷனாக, 1290 டாலருக்கு ஆண்களுக்கான டி-ஷர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 



இந்த ஆடையின் விலை மக்களை ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், இதன் வடிவமைப்பு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடையில், ஒரு டி சர்ட்டின் முன்பு, கட்டம் போட்ட சட்டை குத்தி வைத்திருப்பது போல இதன் வடிவமைப்பு உள்ளது. இந்த ஆடை வடிவமைப்பு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆடையினை, இரண்டு முறைகளில் அணியலாம் என பெலேன்சியாகா வலைதளம் தெரிவித்துள்ளது.



ஆனால், பலர் தாங்களாகவே இதுபோன்ற ஆடையை தயாரித்து, நிறைய பணத்தை சேமிக்க முடிவு செய்தனர். இதனை ஏன் சிறந்த ஐடியாவாக பெலேன்சியாகா கருதியது என்ற மக்களின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.



இந்த மர்மத்தைத் தீர்க்க, அந்நிறுவனத்திற்கு நாங்கள் தொடர்புகொண்டோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.