ஐபிஎல் போட்டியின்போது வட போச்சே என்பதற்கே, சிக்சர் அடித்ததை சிறுவன் ஒருவர் கொண்டாடிக் கொண்டிருக்க மற்றொருவர் அதே கொண்டாட்டத்துடன் சிறுவன் கையில் இருந்த ஸ்நாக்சை தட்டிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஸ்நாக்ஸ் கையில் இருந்து கீழே விழும்போது சிறுவன் கொடுக்கும் ரியாக்ஷ்ன் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா! ரசிகரின் போனை உடைத்த ரொனால்டோ!


மும்பை - பெங்களுரு அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது. சேஸிங் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனான மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பெறுவதற்கு போராடிக் கொண்டுள்ளன. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஒரு கோர்வையாக மும்பை அணி விளையாட தவறி வருகிறது.



இதுவே அந்த அணிக்கு பிரச்சனையாக இருக்கும் நிலையில், பெங்களுரு அணி சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனை அவர்களது சொந்த மண்ணிலேயே எதிர்கொண்டு வெற்றியையும் பெற்றுள்ளனர். பெங்களுரு அணி சேஸிங் செய்யும்போது தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. பெங்களூரு அணி வீரர் ஒருவர் சிக்சர் விளாச, மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக அதனைக் கொண்டாடியுள்ளனர். அப்போது சிறுவன் கையில் இருந்த ஸ்நாக்ஸை ஒருவர் தட்டிவிட, அதற்கு அந்த சிறுவன் வட போச்சே என்கிற ரீதியில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | King Cobra Video: என்ன பயம்... என் பிரண்ட் தான்; ராஜநாகத்தை கிஸ் செய்யும் சிறுமி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR