13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்க்கஸில் இருந்து விடுதலை பெற்ற சிங்கம்.. உணர்ச்சிபூர்வமான சம்பவம்
அடிமைத்தனத்திலும் சிறைவாசத்திலும் வாழ்வதை விட மோசமான ஒன்று உலகில் எதுவும் இல்லை. 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முதல் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சிங்கம்.
புதுடெல்லி: அடிமைத்தனத்திலும் சிறைவாசத்திலும் வாழ்வதை விட மோசமான ஒன்று உலகில் எதுவும் இல்லை. அது ஒரு மனிதனாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும் சரி, சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. இதேபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முதல் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சிங்கத்தைக் காணலாம்.
அந்த வீடியோவில் சிங்கம் வயலில் பச்சை புல் மற்றும் மண்ணை உணரும் விதம், பல சமூக ஊடக பயனர்களை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. இந்த 27 விநாடி வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவின் தலைப்பில், "சர்க்கஸிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சுதந்திரத்தை உணர்ந்த சிங்கத்தின் ஆவி" என்று எழுதியுள்ளார். சிங்கம் தனது பாதங்களை சேற்றில் தேய்த்துக் கொண்டிருப்பதை அவர் வீடியோவில் காணலாம். இறுதியாக சுதந்திரமாக இருப்பதை உணர்ந்து தனது சுதந்திரத்தை அனுபவித்து வரும் சிங்கம்.
சிங்கம் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சர்க்கஸின் ஒரு கூண்டில் கழித்துள்ளது. தற்போது அது சுதந்திரமாக உலா வருவதை பார்த்தால் நீங்களும் மகிச்சியடைவீர்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பலர் இந்த வீடியோ பகிர்ந்து மற்றும் பாராட்டி வருகிறார்கள்.