நடிகர் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்திய அளவில் (ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில்) அதிகம் டிரண்ட் ஆன #HASHTAG பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல இடுகை வலைதளமான ட்விட்டர், தனது 12-வது #HASHTAG தினத்தை கொண்டாடியது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட #HASHTAG-னை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளது.


குறிப்பாக 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தல், 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகிய #HASHTAG-குகளை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக உருவான திரைப்படம் ‘விஸ்வாசம்'.  இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படம் உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்களுக்கு அகச்சிறந்த விருந்தாக அமைந்தது. தமிழ்நாட்டை பெறுத்தவரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனைப்படைத்து முன்னணியில் இருந்தது.
 
இத்திரைப்படத்தில் நடிகர் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் ஏற்படுத்திய சமூகவலைத்தளங்களில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்தினை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்த நிலையில் தற்போது ட்விட்டரிலும் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது.