இங்கிலாந்து கல்லூரி மாணவர் ஒருவரின் Laptop-னை திருடிச்சென்ற திருடன், தனது தவறுக்கு மன்னிப்பு கோரி மாணவருக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து நாட்டின் பல்கலை., ஒன்றில் பட்டய படிப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரின் மடிக்கணினி கடந்த வாரம் திருடுபோனது. யார் எடுத்திருப்பார் என அவர் குழம்பிவந்த நிலையில் அவரது மின்னஞ்சலுக்கு Laptop-னை திருடிச்சென்ற நபர் மன்னிப்பு தெரிவித்து செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார்.


அந்த மன்னிப்பு செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "உங்களது மடிக்கணினியினை திருடிச் சென்றது நான். உங்கள் மடிகணினி திருடப்பட்டதற்கு நான் மிகவும் வருந்துகின்றேன். நான் மிகவும் பண கஷ்டத்தில் இருப்பதால் உங்கள் மடிகணினியினை திருடிவிட்டேன், உங்கள் மடி கணினியில் இருக்கும் தகவல்களை கொண்டு நீங்கள் கல்லூரி மாணவர் என்பது தெரிகிறது.



இந்த கணினியின் உங்கள் கல்லூரி ப்ராஜக்ட் தகவல்கள் இருந்தால் கூறுங்கள், உடனடியாக அனுப்பி வைக்கின்றேன். உங்களின் நிலைமை அறிந்தே உங்களது போன், பணப்பையினை விட்டுவைத்து வந்துள்ளேன்.


மீண்டும் எனது செயலுக்கு நான் வருத்தம் தெரவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியின் புகைப்படத்தினை Stevie Valentine என்னும் நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.