கோயில்களில் விலை மதிப்பற்ற சிலைகள், தங்க நகைகள், உண்டியல்கள் ஆகியவற்றை திருடர்கள் திருடிக்கொண்டு செல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நடுராத்திரயில் காரில் வந்திறங்கி, கடவுளை வேண்டி கோயிலில் திருடி செல்வது என்பது மிகவும் அரிதுதான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோன்ற ஒரு சம்பவம்தான் தீபாவளிக்கு முந்தைய நாள், மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடந்துள்ளது. ஜபல்பூரில் உள்ள ஒரு கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், வெள்ளை நிற காரில் வந்திறங்கும் அந்த திருடன், கடவுள் சிலை முன் இருக்கைகளையும் கட்டிக்கொண்டு, பணிவுடன் தெய்வத்திடம்  வேண்டி உண்டியலை தூக்கிக்கொண்டுச்சென்றுள்ளார். 


மேலும் படிக்க | பார்ட்டியில குத்தாட்டம் போடச் சொன்னா பாம்பு டான்ஸாடும் இளைஞர்! நண்பேண்டா காமெடி


தீபாவளிக்கு அன்று அதிகாலை 2 மணி, ஜபல்பூரில் உள்ள கௌர் சௌக்கி என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. தீபாவளி அன்று காலையில் வந்த பக்தர்கள் இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளனர். 



சிசிடிவியில் பதிவான காட்சிகளில், திருடன் கையில் மாட்டியிருந்த கைக்கடிகாரம் மற்றும் கோயிலின் வெளியே திருடன் விட்டுச்சென்ற செருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்ற ஒரு சம்பவம், இதே மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. காளி கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Gas Leak at Bhopal: போபாலில் மீண்டும் வாயுக்கசிவு! பலர் மருத்துவமனையில் அனுமதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ