சிங்கிளா வந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்பது உண்மை தான். ஆனால், சிங்கத்தின் வீரியமான மனோபாவம் கூண்டுக்குள்ளும் தொடருமா? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்றல்ல, ஐந்து புலிகள் சூழ்ந்தாலும் தம் கட்டி சீறி தனது சீற்றத்தை காட்டுகிறது சிங்கம். ஆனால், பல முனை தாக்க்குதலால், காட்டு ராஜாவுக்கும் அடி விழுகிறது.


இந்த வீடியோவில் ஐந்து புலிகள் சேர்ந்து, ஒற்றை சிங்கத்தை எப்படி சுற்றி வளைக்கிறது என்பதை பார்க்கலாம். இதுபோன்ற காட்சியை இதுவரை பார்த்திருக்க முடியாது.  


5 புலிகளால் சூழப்பட்ட சிங்கத்தை அனைவரும் மாறி மாறி தாக்குவதை வீடியோவில் காணலாம். இந்த தாக்குதல்களை அனைவரும் வேடிக்கைப் பார்த்தாலும் சிங்கம் ஆதரவற்ற நிலையில் உள்ளதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது.


மேலும் படிக்க | கூண்டுக்குள்ள இருந்தாலும் நான் தான் ராஜா


காட்டு விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது சகஜம் தான் என்றாலும், சிங்கங்கள், சிறுத்தைகள் பிற விலங்குகளை வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம்.


ஆனால் ஒரு சிங்கமும் 5 புலிகளும் சண்டையிடுவதை வெகு சிலரே பார்த்திருப்பார்கள். அதிலும் கூண்டுக்குள் விலங்குகள் குஸ்தி போடும் காட்சியை யாரும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இப்படி ஒரு சிங்கிள் சிங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சிங்கம் மற்றும் புலி சண்டை
வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிங்கம் மற்றும் 5 புலிகள் ஒன்றாக கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அடுத்த நொடியே அவர்களுக்குள் ஏதோ ஒரு கருத்து வேற்றுமை ஏற்படுகிறது.


மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா


ஐந்து புலிகளும் சேர்ந்து ஒரு குழுவாக அமைத்து சிங்கத்தைத் தாக்குகின்றன. இதன் போது பல புலிகள் சிங்கத்தை அறைவதையும் காணமுடிகிறது. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் என்ற திரைப்பட வசனம் நினைவுக்கு வருவதையும் தடுக்கமுடியவில்லை.


உதவியற்ற பரிதாப நிலையில் சிங்கத்தை இதுவரை பார்த்ததில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. விலங்குகளின் விளையாட்டின் ஒரு பகுதியாகத் தோன்றினாலும், இந்த வீடியோவை பார்க்கும்போது காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் கூண்டில் அடைக்கப்பட்டால் நிலைமை பரிதாபம் தான் என்று தோன்றுகிறது.



Wildlifeanimall எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்களின் ரியாக்ஷன் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பார்வைகளையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR