காட்டில் புலி, சிங்கம் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அருகில் செல்ல கூட உள்ள வேறு எந்த விலங்கும் துணிவதில்லை. அவை மிகவும் ஆபத்தானவை. எதிரில் உள்ள விலங்குகளை நொடியில் தாக்கி வீழ்த்தும் இரையாக்கும் திறமை வாய்ந்தவை. இருப்பினும், புலிகள் மற்றும் சிங்கங்களை தனது  அறிவுத்திறனாலும், சாதுர்யத்தாலும்  ஏமாற்றும் சில விலங்குகளும் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டில்  இரையாக்க துடிக்கும் விலங்குகள், தப்பிக்க நினைக்கும் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் வாழ்வா சாவா போரட்டங்கள் மிகவும் திகிலூட்டக் கூடியவை என்றால் மிகையில்லை. ஆனால், சில வேட்டைகளில் ஆச்சயம் அளிக்கும் வகையில், 


காட்டு விலங்குகள் தொடர்பான சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணலாம். குரங்கை வேட்டையாடும் நோக்கத்தில் மரத்தில் ஏறிய புலி, குரங்கு விரித்த வலையில் விழுந்தது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மரத்தில் குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதைக் காணலாம். அப்போது அதனை வேட்டையாட ஒரு புலியும் மரத்தில் ஏறுகிறது. புலி தன்னை நோக்கி வருவதைக் கண்டு குரங்கு பலவீனமான மரக்கிளையைப் பிடித்துத் தொங்குகிறது. புலியும் அதே கிளையைப் பிடிக்க முன்னோக்கி நகர்கிறது. சந்தர்ப்பத்தை சரியாக கணித்து, குரங்கு வேறொரு கிளைக்கு தாவ, புலி படு மோசமாக குரங்கு விரித்த வலையில் சிக்கியது. புலி பலமாக மரத்தடியில் விழுந்து விட்டது.


வீடியோவை இங்கே காணலாம்:



காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் பகிர்ந்துள்ளார். வீடியோவுடன், 'சூழ்நிலை கைதி' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். வீடியோவைப் பார்த்த பிறகு, குரங்கின் புத்திசாலித்தனத்தையும் நீங்கள் பாராட்டுவீர்கள். இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனர்கள் வீடியோவிற்கு பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR