சீனாவின் பிரபல செயலியான TikTok  தற்போது அதிரடியாக ஒரு தனியுரிமை அம்சத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் என்ன பயன்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பார்க்கக்கூடிய விஷயங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமைக்க முடியும். இது இன்றைய தொழில்நுட்ப உலகில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு ஒரு ஆறுதல் தரும் நல்ல செய்தி…
குழந்தைகள் குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் மற்றும் தகவல்களை மட்டுமே தேடலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள் பெற்றோருக்கு வந்தால் நிம்மதி தானே?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கள் குழந்தைகளை வைத்து தயாரிக்கும் குறுகிய டிக்டாக் வீடியோக்களில் யார் கருத்து தெரிவிக்கலாம், யார் தங்கள் கணக்கைப் பார்க்க முடியும், அவர்கள் விரும்பிய வீடியோக்களை யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். எனவே இப்போது அநாவசிய டென்சனுக்கு குட் பை….


வீடியோக்கள், பயனர்கள், ஹேஷ்டேக்குகள் அல்லது ஒலிகளைத் தேடும் search ஆப்ஷன்களை கட்டுக்குள் வைத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் கட்டுப்படுத்த முடியும். அதாவது நமது வீடியோக்களை யார் பார்க்கலாம், நாம் பார்த்து லைக் செய்தவற்றை யார் பார்க்கலாம் என்பதை மட்டுமல்ல, தங்கள் குழந்தைகள் எதைத் தேடலாம், எதைப் பார்க்கவேண்டாம் என்ற முடிவு பெற்றோர்களின் கையில் வந்தால் நல்லது தான்.
 
ஏற்கனவே பெற்றோர் நேரடி செய்திகள் குழந்தைகளுக்கு தேவையில்லை என்று நினைத்தால் அந்த தெரிவை மூடவும்  அல்லது கட்டுப்படுத்தும் ஆப்ஷனையும் வழங்கியிருக்கிறது என்று Verge பத்திரிகை தெரிவிக்கிறது.


புதிய விருப்பங்கள் அனைத்தும் டிக்டோக்கின் `Family Pairing` அம்சத்தின் ஒரு பகுதியாகும்.தற்போது டிக்டோக் எடுத்திருக்கும் முயற்சிக்கு அனைவரும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.


பிப்ரவரி 2019 இல், குழந்தைகளின் தனியுரிமைச் சட்டத்தை மீறியதானக் குற்றச்சாட்டில் டிக்டாக் நிறுவனம் அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக ஆணையத்திற்கு (FTC) 7 5.7 மில்லியன் செலுத்தியது.


இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், `Family Pairing`  தெரிவை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தது, இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் டிக்டாக் செயல்பாடுகள் மீது அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க உதவியாக இருக்கும். தங்களுடைய சொந்த கணக்கை தங்கள் குழந்தைகளின் டிக்டேக் கணக்குடன் இணைப்பதன் மூலம் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.   


இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் கணக்குகளை புதிய அமைப்பின் கீழ் இணைக்க ஒப்புக்கொள்வதற்கு தங்கள் குழந்தைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.


Read Also | மிகவும் ஆபத்தான WhatsApp அம்சங்களை உடனடியாக மாற்றவும்! இல்லையெனில் ...


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR