ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறும் நிலையில் பெண்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது முன்னோர்கள் காலத்தில் பாலியல் தொல்லை என்ற வார்த்தை கூட இடமில்லை. ஆனால், தற்போது ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு மூன்று குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளகுகின்றனர். என்னதான் பெண்களுக்கு சுகந்திரம் கிடைத்தாலும், அவர்கள் வெளியில் நடமாட இன்னும் முழு சுகந்திரம் கிடைக்கவில்லை. 


பாலியல் தொலைகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பிரபல ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில டிப்ஸ்களை பதிவிட்டுள்ளார்.


பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் சில தற்காப்புக் கலைகளை எப்படி கையாள வேண்டும் என அவர் சில மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் எளிய முறையிலான பயிற்சிகள் உள்ளன. அதைக் கொண்டு அதிரடியாக எவ்வாறு வன்முறையாளர்களை கையாள முடியும். அவர் வெளியிட்டுள்ள விளக்கப் படங்கள் பெண்களின் பாதுக்காப்பிற்கு அவசயமாக இருக்கும். இந்த டிப்ஸ்-சை உங்களை தற்காத்துக்கொள்ள பயன்படுத்தி கொள்ளுங்கள். 


இதோ அந்த டிப்ஸ் புகைப்படங்கள் உங்களுக்காக....! 



 


ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார். ரன், காக்க காக்க, அந்நியன், சிவாஜி, எந்திரன், 7ஆம் அறிவு, பாகுபலி, மகாதீரா, புலி முருகன் உட்பட பல படங்களுக்கு சண்டை இயக்குனராகப் பணிபுரிந்து புகழ் பெற்றவர் பீட்டர் ஹெயின். புலி முருகன் படத்தில் இவர் அமைத்த சண்டை காட்சிகளுக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடதக்கது.