உலகம் முழுவதும் வன விலங்குகள் ஊர் பகுதிகளுள் நுழையும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. வனத்துறையினரும் வனவிலங்குகள் மற்றும் மக்கள் மோதலை தவிர்க்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும், முழுமையாக கட்டுபடுத்த முடியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளன. கோடைகாலம் என்பதால், வன விலங்குகளின் வருகை அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மூதாட்டிக்காக ரோட்டை பிளாக் செய்த இளைஞர் - வைரல் வீடியோ


யானைகள் மற்றும் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்த நிலையில், குன்னூரில் கரடியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நள்ளிரவில் கரடிகள் வந்து, வீதிகளில் சர்வ சாதாரணமாக உலாவுகின்றன. வீடுகளின் கதவுகளையும் அவை தட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.