கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 நிமிடங்களுக்கு விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின்  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கு ஏற்றும் முயற்சிக்கு இந்தியா முழுவதும் ஒத்துழைப்பு அளித்த நிலையில், உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் மஞ்சு திவாரி வித்தியாசமான முயற்சி ஒன்று கையில் எடுத்துள்ளார்.


அவரது வித்தியாசமான முயற்சி தற்போது, ஆரவாரமான சத்தத்துடன் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.



இந்தச் செயலுக்குப் பிறகு, அவர் தனது கணவர் படமாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்: "டீப் ஜலானே கே பாத், கொரோனா வைரஸ் பாகேட் சாயல் (விளக்குகள் ஏற்றிய பிறகு, கொரோனா வைரஸை அனுப்பி வைத்தபோது)." என்று இந்த வீடியோவிற்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.


இந்த வீடியோ வெளியான பிறகு, விமர்சனங்களை எதிர்கொண்ட அவர், பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தீபாவளி பண்டிகை போல தான் இந்த நிகழ்வினை உணர்ந்ததால் தான், இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


"முழு நகரமும் மெழுகுவர்த்திகள் மற்றும் மண் விளக்குகளால் ஒளிரப்படுவதை நான் கண்டேன். இது தீபாவளி என்று நான் உணர்ந்தேன், மகிழ்ச்சியுடன் காற்றில் சுட்டேன். என் தவறை நான் ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று திருமதி திவாரி பின்னர் தனது செயலுக்கு மண்ணிப்பு கோரியுள்ளார்.


திவாரி பால்ராம்பூரில் உள்ள பாஜகவின் பெண்கள் பிரிவின் தலைவர் ஆவார். அவரது செயல்பாடை தொடர்ந்து அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.