Toll Plaza Video: சுங்கச்சாவடியில் நடந்த சம்வம் வீடியோவை பகிர்ந்த போலீசார்
மினி ட்ரக்கில் கும்பலாக ஆட்களை ஏற்றி சென்ற வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைராலாகி வருகிறது.
டோல் பிளாசா வைரல் வீடியோ: பண்டிகை காலத்தில் அல்லது ஏதாவது ஒரு விசேச நிகழ்சிகளில் கலந்துக்கொள்ள உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் ஒன்றாக மினி ட்ரக்கில் பயணம் செய்வது வழக்கம். இதை நீங்கள் பலமுறை பார்த்திருக்க வேண்டும். அதேபோன்று மினி ட்ரக்கில் கும்பலாக ஆட்களை ஏற்றி சென்ற வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைராலாகி வருகிறது. இந்த வேடிக்கையான வீடியோ பாருங்கள். இந்த வீடியோவை சைபராபாத் போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சம்பவம் தெலுங்கானாவின் சைபராபாத்தில் பகுதியில் நடந்துள்ளது. உங்கள் அனைவரும் தெரியும் சுங்கச்சாவடி கடக்கும் போது, நம்மிடம் வரி வசூல் செய்வதற்கு ஒரு தடிப்பு கம்பி இருக்கும். இந்த வீடியோவில் நீங்கள் காணலாம், ஒரு லாரி சுங்கச்சாவடியில் வரி செலுத்திவிட்டு அங்கே வந்து புறப்படுகிறது. அந்த லாரிக்கு பின்னாடி ஒரு மினி டிராக் வருகிறது. அதில் அதிகப்படியனா ஆட்கள் ஏற்றப்பட்டு உள்ளனர் என்பதையும் நீங்கள் காணலாம்.
ALSO READ | Martial Arts: சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்
மினி டிராக் டிரைவர் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க டோல் பிளாசாவை அவசரமாக கடக்க முயற்சிக்கிறார். ஆனால் தடுப்பு இயக்கப்படும் டிராக் மீது உள்ள ஆட்களின் தலையில் நேரடியாக விழுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த காவல்துறையினர், அவசரமாக வாகனம் ஓட்டுவதும், அதிகப்படியான பொருட்களை வண்டியில் ஏற்றிச் செல்வதும் எப்போதும் ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் #RoadSafety #RoadSafetyCyberabad போன்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி உள்ளானர்.
ALSO READ | ஷிவானியின் வைரலாகும் புகைப்படம்; பிரபல நடிகரை நேரில் சந்திப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR